சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கடல் அலையில் மின்சாரம்

Added : ஆக 11, 2022 | |
Advertisement
அலை ஆற்றலில் மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் புதிதல்ல. இயந்திரத்தின் மீது நேரடியாக மோதும் கடலலையின் விசையையே அவை மின்சாரமாக மாற்றுகின்றன. ஆனால், வேவ் ஸ்வெல் எனர்ஜி வடிவமைத்துள்ள யுனிவேவ் 200 இயந்திரம் மாறுபட்டது.யுனிவேவ் இயந்திரம், ஒரு காற்றுத் துளை அமைப்பை கொண்டது. வேகமாக நுழையும் அலை நீர், இந்த இயந்திரத்தின் நடுவே கான்கிரீட்டால் ஆன துளைக்குள் புகுந்து
அலை ஆற்றல் மின்சாரம்,  யுனிவேவ் இயந்திரம், கடல் அலை ஆற்றல், யுனிவேவ் 200 இயந்திரம் , Wave Energy Electricity, Uniwave Machine, Ocean Wave Energy, Uniwave 200 Machine,

அலை ஆற்றலில் மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் புதிதல்ல. இயந்திரத்தின் மீது நேரடியாக மோதும் கடலலையின் விசையையே அவை மின்சாரமாக மாற்றுகின்றன. ஆனால், வேவ் ஸ்வெல் எனர்ஜி வடிவமைத்துள்ள யுனிவேவ் 200 இயந்திரம் மாறுபட்டது.

யுனிவேவ் இயந்திரம், ஒரு காற்றுத் துளை அமைப்பை கொண்டது. வேகமாக நுழையும் அலை நீர், இந்த இயந்திரத்தின் நடுவே கான்கிரீட்டால் ஆன துளைக்குள் புகுந்து மேலெழும்புகிறது. அப்போது, துளையில் உள்ள காற்று, விசையோடு வெளியேற, அதன் பாதையில் இருக்கும் டர்பைன் சுழன்று மின்சாரம் உற்பத்தியாகிறது.

அதுமட்டுமல்ல, எழும்பிய நீர், கீழே வரும்போது ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப, காற்று வேகமாக உள்ளே வரும். அப்போதும் டர்பைன் சுழன்று மின்சாரம் உற்பத்தியாகும்.இப்படி, அலைகள் காற்றை அழுத்தியும், காற்றை உறிஞ்சியும் டர்பைனை தொடர்ந்து இயக்கி மின்சாரத்தை இரவு, பகலாக உற்பத்தி செய்யும். டாஸ்மேனியாவிலுள்ள கிங் தீவில், கடந்த 12 மாதங்களாக, யுனிவேவ் 200 வெற்றிகரமாக இயங்கி வருகிறது. கடல் அலை ஆற்றல் துறையில் இது ஒரு புதிய துவக்கம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X