காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தற்கொலை படை தாக்குதல் முறியடிப்பு; 3 வீரர்கள் வீரமரணம்

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
ரஜோரி: காஷ்மீரில் ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்த முயன்ற தற்கொலை படை தாக்குதல் முறியடிக்கப்பட்டது. அதில் 3 வீரர்கள் வீரமரணமடைந்தனர். 2 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ரஜோரியின் தர்ஹல் பகுதியில் ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படையின் முகாம் உள்ளது. இங்கு புகுந்த 2 பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். கடந்த 2019ம் ஆண்டு
Jammu and Kashmir, Rajouri encounter update, Terrorists attempt to infiltrate Army camp in JandK, Infiltration bid foiled in JandK, Indian Army in counter terrorist operation,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ரஜோரி: காஷ்மீரில் ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்த முயன்ற தற்கொலை படை தாக்குதல் முறியடிக்கப்பட்டது. அதில் 3 வீரர்கள் வீரமரணமடைந்தனர். 2 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ரஜோரியின் தர்ஹல் பகுதியில் ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படையின் முகாம் உள்ளது. இங்கு புகுந்த 2 பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். கடந்த 2019ம் ஆண்டு யுரியில் 19 வீரர்கள் வீரமரணம் அடைந்த நிகழ்வு போல் தற்போதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். உடனடியாக உஷாரடைந்த இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர். அதில் 2 பயங்கரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த மோதலில் 3 வீரர்கள் வீரமரணமடைந்தனர். ஒரு அதிகாரி மற்றும் ஜவான் ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து அந்த முகாமில் தேடுதல் வேட்டையில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.


latest tamil news


பயங்கரவாதிகள் அட்டாக் காஷ்மீரில் 3 வீரர்கள் பலி | Terriosm | Fight | Soldiers Death


இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் நெருங்கி வரும் நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளதால், காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஆக-202209:10:57 IST Report Abuse
பேசும் தமிழன் நாட்டுக்காக உயிர்நீத்த தியாகிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.... அவர்களது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்..... ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
thiyaga rajan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஆக-202213:44:37 IST Report Abuse
thiyaga rajan நிதீஷ் குமார் அவர் மானில மக்களால் தண்டிக்க படுவார். ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
11-ஆக-202213:36:24 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN நம் தேசதிற்காக உயிர் தியாகம் செய்த நமது இராணுவ வீரர்களுக்கு எங்கள் வீரவணக்கம். ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X