20 ஆயிரம் கால்நடைகள் கடத்தல் மன்னன்: மம்தாவின் உதவியாளர் சி.பி.ஐ.,யால் கைது

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
கோல்கட்டா : மம்தாவின் நெருங்கிய உதவியாளரும் , திரிணாமுல் காங்., மூத்த நிர்வாகியுமான அனுப்பிரதா மோந்தல் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே மம்தாவின் அரசில் அமைச்சராக இருந்த பார்தா சட்டர்ஜி ஆசிரியர் பணி நியமனத்தில் கோடி, கோடியாக லஞ்சம் சுருட்டிய ஒருவர் கைது செய்யப்பட்தை அடுத்து தற்போது மீண்டும் அரவது நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டிருப்பது மம்தாவுக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோல்கட்டா : மம்தாவின் நெருங்கிய உதவியாளரும் , திரிணாமுல் காங்., மூத்த நிர்வாகியுமான அனுப்பிரதா மோந்தல் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார்.

ஏற்கனவே மம்தாவின் அரசில் அமைச்சராக இருந்த பார்தா சட்டர்ஜி ஆசிரியர் பணி நியமனத்தில் கோடி, கோடியாக லஞ்சம் சுருட்டிய ஒருவர் கைது செய்யப்பட்தை அடுத்து தற்போது மீண்டும் அரவது நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டிருப்பது மம்தாவுக்கு பேரிடியாக இறங்கி உள்ளது.



latest tamil news



கடந்த 2015- 2017 மாநிலம் விட்டு அருகில் உள்ள வங்கதேசத்திற்கு 20 ஆயிரம் கால்நடைகள் சட்டத்திற்கு விரோதமாக கடத்தப்பட்டுள்ளது. இதில் உறுதுணையாக இருந்த அனுப்பிரதா மோந்தலுக்கு கோடிக்ககணக்கில் லாபம் கிட்டியது. இது தொடர்பாக மோப்பம் பிடித்த சிபிஐ வழக்கு பதிவு செய்து 11 பேரை தேடி வந்தது. இதில் மோந்தலுக்கு பல முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் பிர்பமில் சிபிஐ அதிகாரிகள் அனுப்பிரதா மோந்தலை கைது செய்தனர். முன்னதாக அவரது வீட்டின் அருகே 50 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.


latest tamil news


எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த மாநில போலீசார் பலர் இதில் சிக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுப்பிரதா மோந்தல் பிர்பம் மாவட்ட தலைவர் பொறுப்பில் உள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
11-ஆக-202219:40:45 IST Report Abuse
sankaseshan ஸ்வர்ணக்காவின் நேர்மை எளியவர் வேஷம் கலைகிறது இவளுடய மந்திரி சபை கொள்ளை கூட்டம் போல இருக்கு
Rate this:
Cancel
P Karthikeyan - Chennai,இந்தியா
11-ஆக-202219:33:52 IST Report Abuse
P Karthikeyan தேச துரோக குற்றங்கள் பலவற்றை மம்தா செய்துள்ளார் . வங்கதேச தீவிரவாதி ஒருவருக்கு நம்நாட்டு குடியுரிமை கொடுத்து அவரை பாராளுமன்றம் வரை அனுப்பி வைத்து உளவு பார்ப்பதற்கு ஏதுவாக இருந்துள்ளார் . ரோஹிங்கிய முஸ்லிம்களை பல குற்ற செயல்களுக்கு பயன்படுத்தியுள்ளார்.
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
11-ஆக-202219:12:49 IST Report Abuse
அம்பி ஐயர் சீக்கிரம் மமதை யான மம்தாவின் ஆட்சிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X