போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (75) | |
Advertisement
சென்னை: போதை தான் பல குற்றங்களுக்கு தூண்டுதலாக இருப்பதாகவும், போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான் எனவும் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
Stalin, DrugAwareness, DrugFreeTamilNadu, Narcotics, TamilnaduCM, தமிழகம், தமிழ்நாடு, போதைப்பொருள், விழிப்புணர்வு, அழிவுப்பாதை, ஸ்டாலின், முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: போதை தான் பல குற்றங்களுக்கு தூண்டுதலாக இருப்பதாகவும், போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான் எனவும் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு அருகே போதை பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். இது தொடர்பாக அரசு சட்டங்களை கடுமையாக திருத்த உள்ளோம். சிறப்பு நீதிமன்றங்களையும் அமைக்க இருக்கிறோம்.

போதை மருந்து விற்பவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய சைபர் செல் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வகையான குற்றவாளிகள் இந்த சமுதாயத்தையே கெடுக்க கூடிய குற்றவாளிகள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசு எந்தவித தயக்கமும் காட்டாது. போதைப் பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 41,625 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 50 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், போதை நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.


latest tamil news


போதைப் பொருள் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு செல்லும் சங்கிலியை நாம் உடைத்தாக வேண்டும். போதைப்பொருளுக்கு சிலர் அடிமையாகி விடுகின்றனர். அதனை திருத்துவதற்கு ஒட்டுமொத்த சமூகமும் முயற்சி எடுக்க வேண்டும். பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால்தான் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். போதை என்பது சமூகத்தையே அழித்துவிடும் என்பதை உணர வேண்டும்.

போதைக்கு காரணம் தேடாதீர்கள், பிரச்னைகளுக்கு தீர்வை தேடுங்கள், அதன் முடிவில் வெற்றி கிடைக்கும். போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவு பாதை தான். அதில் யாரும் செல்லாதீர்கள், மற்றவர்களையும் செல்ல விடாதீர்கள். போதை தான் பல குற்றங்களுக்கு தூண்டுதலாக உள்ளது. போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வின் காவலர்களாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-ஆக-202210:38:03 IST Report Abuse
Mani . V ஆமா, இந்த துண்டு சீட்டு சித்தர் எப்பவுமே இப்படியா? அல்லது இப்படித்தான் எப்பவுமேவா? அதுதான் அழிவுக்கு அழைத்துச் செல்கிறது என்று தெரிகிறதே. அப்புறமென்ன அந்த டாஸ்மாக் கருமத்தை மூடித் தொலைய வேண்டியதுதானே?
Rate this:
Cancel
12-ஆக-202207:35:44 IST Report Abuse
பேசும் தமிழன் அப்போ எதற்கு அந்த போதை பொருளை விற்கும் கடை (டாஸ்மாக்) நடத்தி... தமிழக மக்களை புதைகுழியில் தள்ள வேண்டும்..... குற்றங்கள் நடைபெற முதல் காரணமாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டியது தானே???
Rate this:
Cancel
Shiva -  ( Posted via: Dinamalar Android App )
12-ஆக-202206:52:56 IST Report Abuse
Shiva மக்களுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு தங்களுக்கு அருகதை இல்லை முதல்வரே. இந்த வசணத்தையெல்லாம் டாஸ்மாக்கை மூடிவிட்டு பேசவும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X