தென் மாநில சுற்றுப்பயணத்தில் கர்நாடகாவுக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. மாடர்ன் சிட்டி, பண்டைய கலாசாரம், அழகிய அரண்மணை, கண்கவர் கடற்கரை என ஏராளமான இடங்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்கின்றன. கர்நாடகாவில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் குறித்துப் பார்க்கலாம்.
ஹம்பி
![]()
|
துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள இந்த பழமையான நகரம் யுனெஸ்கோவின் பாரம்பரிய இடங்களின் பட்டியலிலிலுள்ளது. விஜயநகரப் பேரரசில் இருந்த ஏராளமான பாழடைந்த கோவில்களை இங்கு இன்றும் காண முடிவது சிறப்பம்சமாகும். வரலாற்று பிரியர்களுக்கு ஹம்பி சிறந்த தேர்வாகும். நகருக்குள் நுழைந்தவுடனேயே அந்தக்கால கைவினைக் கலைஞர்களின் திறமையை பார்த்து மெய்மறக்கலாம். பாரம்பரியத்தை போற்றும் வகையில் 50 ரூபாய் நோட்டில் ஹம்பி நகர இடிபாடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட விட்டலர் கோவில் கல்ரதம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
கூர்க்
கர்நாடகாவில் மைசூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அழகிய சுற்றுலாத் தலம் கூர்க். குடகு (கொடகு) என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு நிலவும் குளிர்ச்சியான பருவநிலைக் காரணமாக 'இந்தியாவின் ஸ்காட்லாந்து' என அழைப்படுகிறது. இங்குள்ள தலைக்காவேரி என்னும் இடத்தில் தான் காவிரியாறு உற்பத்தியாகிறது. எங்கு திரும்பினாலும் பச்சை பசேலென்ற காடுகள், ரம்மியமாய் ஆர்ப்பரிக்கும் அருவிகள், அழகிய காபி, தேயிலை தோட்டங்கள் என இயற்கை அழகு தாராளமாகக் கொட்டி கிடக்கின்றது.
கோகர்ணா
![]() Advertisement
|
சிக்மகளூர்
![]()
|
கர்நாடகாவின் காபி நிலம் என்றும் அழைக்கப்படும் சிக்மகளூரில் கோடையிலும் குளிர்ச்சியாக இருப்பதால் விடுமுறையில் கூட்டம் அலைமோதும். மலையேறுபவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பிடித்தமான பகுதியாகும். மலைப் பிரதேசங்கள், நீர்வீழ்ச்சிகள், கோவில்கள், இயற்கை பிரியர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வரும் இடம் இது.
பெங்களூரு
தோட்டத்தின் நகரம் என்றும் அழைக்கப்படும் பெங்களூரு கர்நாடகாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். பசுமை, நெடிய சுவாரசியமான கட்டடங்கள் மற்றும் கோவில்களால் நிறைந்திருப்பதால் பலரின் விருப்பமாக இது உள்ளது. இருப்பினும், போக்குவரத்து நெரிசல்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு சவாலாக உள்ளது.
பாதாமி
![]()
|
கர்நாடகாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பாதாமி, வரலாறு மற்றும் கட்டடக்கலைக்கு சான்றாக உள்ளது. இங்குள்ள பழமையான குகைக்கோவில்கள், கோட்டைகள் மற்றும் வரலாற்று இடங்கள் அனைத்தும் வாழ்நாளில் ஒரு முறையேனும் பார்க்கக்கூடிய இடங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு கால் பதித்தவுடனேயே திராவிட கட்டடக் கலையின் உதாரணங்களை காணலாம்.
மைசூர் அரண்மனை
![]()
|
அழகின் பிரமாண்டமும் வரலாற்று பின்னணியும் கொண்ட மைசூர் அரண்மனை இந்தோ சராசனிக், திராவிடம், ரோமன் மற்றும் ஓரியண்டல் போன்ற பல கட்டடக்கலை அம்சங்களும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு பிரபலமான தசரா பண்டிகையின் போது, கவுரவத்தின் அடையாளமாக பீரங்கிகள் முழங்கப்படுகின்றன; இங்குள்ள தங்க அரியாசனம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
தண்டேலி
![]()
|
சாகச பயணம், மலையேற்றப் பிரியர்களுக்கு ஏற்ற சொர்க்க பூமியாக உள்ளது தண்டேலி. கர்நாடகாவின் மேற்கில் வனப்பகுதிகள் சுழ்ந்துள்ள இந்த நகரில், கோடையிலும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இங்குள்ள வனவிலங்கு சரணாலயம், தேசியப்பூங்காவில் அரிய வகை பறவை, விலங்கினங்களை பார்ப்பது மனதுக்கு உற்சாகம் அளிக்கும் ஒன்றாகும். 'வாட்டர் ஸ்போர்ட்ஸ்' என்ற தண்ணீர் விளையாட்டுகளும் இங்கு பிரபலமாகும். 'ரிவர் ராப்டிங்', 'கயாகிங்', 'ரோப் ரிவர் கிராஸிங்' போன்ற தண்ணீர் விளையாட்டுகள் திரில்லிங் அனுபவத்தை அளிக்கிறது. இங்கு சுபா அணைக்கட்டு, சைக்ஸ் பாயிண்ட், ஷிரோலி சிகரம், சின்தேரி பாறைகள் போன்றவை பிற அம்சங்களாகும்.