நான் துணை ஜனாதிபதியாக விரும்பினேனா?: நிதிஷ்குமார் விளக்கம்

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
பாட்னா: துணை ஜனாதிபதியாக தான் விரும்பியதாக பா.ஜ.,வின் சுஷில் மோடி கூறியது காமெடி என பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சி தலைவருமான நிதிஷ்குமார், பா.ஜ., உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து நேற்று (ஆக.,10) 8வது முறையாக முதல்வராக பதவியேற்றார். இந்த நிலையில், பா.ஜ., தலைமையிலான தேசிய
Vice President, What a Joke, Nitish Kumar, Sushil Modi, Bihar, பீஹார், துணை ஜனாதிபதி, காமெடி, நிதிஷ்குமார், சுஷில் மோடி, முதல்வர்

பாட்னா: துணை ஜனாதிபதியாக தான் விரும்பியதாக பா.ஜ.,வின் சுஷில் மோடி கூறியது காமெடி என பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சி தலைவருமான நிதிஷ்குமார், பா.ஜ., உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து நேற்று (ஆக.,10) 8வது முறையாக முதல்வராக பதவியேற்றார். இந்த நிலையில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தனக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படாததால் தான் கூட்டணியை முறித்துக்கொண்டதாக விமர்சனம் எழுந்தது. இதனை பா.ஜ.,வின் சார்பில் மாநில துணை முதல்வராக இருந்த சுஷில் மோடியும் குறிப்பிட்டிருந்தார்.


latest tamil news


இது குறித்து நிதிஷ்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது: நான் துணை ஜனாதிபதியாக விரும்பினேன் என்று ஒருவர் (சுஷில் மோடி) கூறியுள்ளார். என்ன ஒரு காமெடி. எனக்கு அதுபோன்ற விருப்பம் எதுவும் கிடையாது. ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு நாங்கள் எப்படி ஆதரவளித்தோம் என்று அவர்கள் மறந்து விட்டனரா? தேர்தல் முடியட்டும் என நாங்கள் காத்திருந்தோம். அதன்பின்பு எங்களது ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டது. அவர்களுக்கு ஒரு பதவி கிடைக்கும் என்றால், என்னை பற்றி எதுவேண்டுமென்றாலும் அவர்கள் பேசி கொள்ளட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
11-ஆக-202219:32:00 IST Report Abuse
sankaseshan நிதிஷ் சத்தியசந்தன் ஹரி சந்திரன் வாரிசு . பிரதமர் கனவு பணால் ஆனது , அடிச்சார் பல்டி 2024 தேர்தலுக்கு பின் BJP உடன் ஒட்டிக்கொள்ள ஓடிவருவான்
Rate this:
Cancel
11-ஆக-202217:36:18 IST Report Abuse
மதுமிதா யார் சொன்னது ஊழல் தவறு செய்தவர்களுக்கு நட்பு கூட்டணி அமைத்து துணை போகிறீர்கள்
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
11-ஆக-202217:17:35 IST Report Abuse
Rpalnivelu பழைய மொழி: ஆயா ராம் கயா ராம். புது மொழி: ஆயா நிதிஷ் கயா நிதிஷ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X