அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை: பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த
அதிமுக, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், காலி, பன்னீர்செல்வம், பழனிசாமி, அதிமுக, சென்னை உயர்நீதிமன்றம், சென்னை ஐகோர்ட், உயர்நீதிமன்றம், ஐகோர்ட்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கு இன்றும் மீண்டும் விசாரணைக்கு வந்தது. பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதாடுகையில், அதிமுக கட்சி விதிகளின்படியே பொதுக்குழு கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டும் வழக்கமான பொதுக்குழுவுக்கு தான் 15 நாட்கள் முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும். 5 ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கேட்டதால் கூட்டப்பட்ட பொதுக்குழுவுக்கு 15 நாட்கள் அவகாசம் தேவையில்லை. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் பதவி காலாவதியாகவில்லை.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மட்டும் காலாவதியாகிவிட்டது. ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்திற்கு நோட்டீஸ் கொடுக்கவில்லை எனக்கூற முடியாது. ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவின் போது அறிவிக்கப்பட்டது. பொதுக்குழு தொடர்பான நோட்டீசை தபால் மூலம் தெரிவிக்க வேண்டும் என அவசியமில்லை. 2432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதாக கடிதம் அளித்துள்ளனர்.
ஒற்றைத்தலைமை தான் தேவை என ஜூன் 23 ம் தேதி நடந்த பொதுக்குழுவில் உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவு காரணமாக அன்று அதை நிறைவேற்ற முடியவில்லை.


latest tamil news



ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைமுறைகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் 2021 டிசம்பரில் பதவிகள் காலாவதியாகிவிட்டன. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகள் காலாவதியாகவில்லை. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் திருத்த விதிகளின்படி நடத்தப்பட்டது. பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர். எம்ஜிஆர் ஜெயலலிதாவிற்கு பிறகு, கட்சியை வழி நடத்த பழனிசாமியை முன்னிறுத்தி கட்சியினர் கடிதம் அளித்துள்ளனர். அதிமுக.,வில் தான் உள்கட்சி தேர்தல் ஜனநாயக பூர்வமாக நடத்தப்பட்டுள்ளது என்றார்.


latest tamil news



அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலம் 5 ஆண்டுகளாக இருக்கும் போது ஒராண்டுக்கு முன்னரே காலாவதியானது எப்படி? பெரும்பான்மை உறுப்பினர்கள் பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனரா என கேள்வி எழுப்பினார்.


தீர்ப்பு ஒத்திவைப்பு

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எழுத்துப்பூர்வமாக தங்கள் வாதங்களை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
11-ஆக-202217:16:59 IST Report Abuse
Soumya நீதிபதி ஐயா பேசாம ரெட்ட இழைய பிரிச்சி குடுத்திருங்க
Rate this:
Cancel
SKANDH - Chennai,இந்தியா
11-ஆக-202214:54:19 IST Report Abuse
SKANDH பன்னீர் செல்வம் தேவை அற்ற சட்டநடவடிக்கைகள் மூலம் ஜனநாயகத்தையும் நீதி மன்ற நடவடிக்கைகளையும் கேலி கூத்தாக்குகிறார். அவருக்கு நல்ல தண்டனை கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
Nachimuthu - mettur,இந்தியா
11-ஆக-202214:52:36 IST Report Abuse
Nachimuthu என்னதான் நடக்கட்டும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X