இலவச திட்டமும் சமூக நலத்திட்டமும் வெவ்வேறு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி: இலவச திட்டங்களுக்கும், சமூக நலத்திட்டங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன என உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார்.பா.ஜ., செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்தியாயா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக கிரிமினல் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும்
இலவசம், சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இலவச திட்டங்களுக்கும், சமூக நலத்திட்டங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன என உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார்.

பா.ஜ., செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்தியாயா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக கிரிமினல் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் எனவும் இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். மனுவை நீதிபதி ரமணா அமர்வு விசாரித்தது.


latest tamil news



நீதிபதி கூறியதாவது:இலவசத் திட்ட அறிவிப்புகள் தீவிரமான பிரச்சினை என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. பட்டினியால் தவித்த மக்களுக்கு உணவளிக்க மத்திய அரசு சில திட்டங்களை வைத்துள்ளது. இதை கொடுங்கள், அதை கொடுங்கள், இதைக் கொடுக்க வேண்டாம். அதை கொடுக்க வேண்டாம் என உத்தரவிட்டால் அது எப்படி நடைமுறைக்கு வரும்?. பார்லி., வரம்புகளில் தலையிட விரும்பவில்லை. பிற நாடுகளை பார்த்து பொருளாதார ஒழுங்கை பின்பற்ற வேண்டியுள்ளது என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
11-ஆக-202219:45:23 IST Report Abuse
S.Baliah Seer பள்ளிக்குப் பணம் கட்ட ,படிக்கும் பையனுக்கு உதவித்தொகை வழங்கினால் அது சமூக நலம்.பெண்ணின் திருமணத்திற்கு தங்க தாலி கொடுப்பது சமூக நலம் இல்லை.ஏழை பெண்ணாய் இருந்தால் திருமணத்தின்போது வெறும் மஞ்சள் கயிற்றைக் கட்டினால் போதுமானது.திருமணத்தைப் பதிவு செய்வதுதான் முக்கியம்.
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
11-ஆக-202219:11:42 IST Report Abuse
venugopal s நல்லவேளை உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்காவது இலவசங்களுக்கும், சமூகநல திட்டங்களுக்கும் உள்ள வித்தியாசம் புரிந்து தீர்ப்பளித்துள்ளனரே, அதுவரை சந்தோஷம்.
Rate this:
Cancel
Raja - Coimbatore,இந்தியா
11-ஆக-202216:53:49 IST Report Abuse
Raja உத்தர பிரதேஷத்தில் பிஜேபி கொடுத்தா அது சமூக நலத்திட்டம். திராவிட கட்சிகள் தமிழகத்தில் கொடுத்தால் அது இலவசம். இவ்வளவு தான் வித்தியாசம். இதுக்கு போய் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குழம்பினால் எப்படி.
Rate this:
Mohan - COIMBATORE,இந்தியா
11-ஆக-202219:00:12 IST Report Abuse
Mohanஎன்ன குடுத்தாங்க....பெண்களுக்கு இலவசம் பஸ்ல ...நம்ம ஊர்ல அந்த பஸ் எங்காவது வருதா நேரத்துக்கு ...சரி அந்த பஸ் நிலைமை வெறும் தகர டப்பா ...மலை வந்த ஒழுகுது , நடத்துனர் , ஓட்டுனருக்கு சம்பளம் குடுக்குறாங்களா , படி பணம் ஒழுங்கா குடுக்க இருக்கா ...போக்குவரத்து துறை நல்லா லாபத்துல ஓடி அதுல இலவசம் குடுத்து யார் வேண்டாம்னு சொல்றா..இதுக்கு எதுக்கு இலவசம்...ஒரு கண்ணுல வெண்ணை ஒரு கண்ணுல சுண்ணாம்பு...அந்த பஸ்ல ஏர போன நம்ம மேல எதிருவங்க போல அத்துணை காண்டுல இருகாங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X