மஹா.,வில் வணிக குழுமத்தில் வருமான வரி சோதனை: கட்டுகட்டாக ரூ.56 கோடி பணம் பறிமுதல்

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (29) | |
Advertisement
ஜால்னா: மஹாராஷ்டிராவில் வணிக குழுமத்தில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.56 கோடி அளவிற்கு கட்டுகட்டாக பணம் உள்ளிட்ட ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.மஹாராஷ்டிரா மாநிலம் ஜால்னாவில் உள்ள இரும்பு, ஆடை மற்றும் கட்டுமான தொழில்கள் அடங்கிய வணிக குழுமம் ஒன்று வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலை அடுத்து வருமான வரித்துறை திடீரென சோதனை
Maharashtra, Income Tax, Raid, Benami, Property, Seized, மஹாராஷ்டிரா, வருமான வரித்துறை, ரெய்டு, சோதனை, பினாமி, சொத்துகள், பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஜால்னா: மஹாராஷ்டிராவில் வணிக குழுமத்தில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.56 கோடி அளவிற்கு கட்டுகட்டாக பணம் உள்ளிட்ட ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

மஹாராஷ்டிரா மாநிலம் ஜால்னாவில் உள்ள இரும்பு, ஆடை மற்றும் கட்டுமான தொழில்கள் அடங்கிய வணிக குழுமம் ஒன்று வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலை அடுத்து வருமான வரித்துறை திடீரென சோதனை மேற்கொண்டனர். இந்த வணிக குழுமத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சுமார் 260 வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையை துவங்கினர். இதில் அலுவலகம் ஒன்றில் இருந்து சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வருமானத்தை மறைத்து வாங்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.


latest tamil news


இந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளில் ரூ.56 கோடிக்கு கட்டுகட்டாக பணமும், 32 கிலோ எடையுள்ள தங்கம், வைரம், முத்து நகைகளும், சில முதலீடு பத்திரங்களும் இருந்தன. பணத்தை எண்ணி முடிக்கவே அதிகாரிகளுக்கு 13 மணி நேரம் ஆனதாம்.
இவ்வளவு இடங்களில் ஒரே நேரத்தில் 260 அதிகாரிகள் சோதனையில் இறங்கியதும், அதில் கட்டுகட்டாக இவ்வளவு பணம் உள்ளிட்ட சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதும் அம்மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஆக-202219:50:22 IST Report Abuse
தேவதாஸ், புனே எனக்கு தெரிஞ்சி கடந்த 30 வருசத்திலே இத்தனை ரெய்டுகள் இவ்வளவு பணம்..... கேள்விப்பட்டதில்லை.....மேற்கு வங்கத்தில் 50 கோடி பணம்..... இங்கே 56 கோடி........
Rate this:
John Miller - Hamilton,பெர்முடா
12-ஆக-202201:34:34 IST Report Abuse
John Millerஅப்பாவியா நீங்கள்? சேகர் ரெட்டி, அன்பு செழியன், கரூர் ஆம்புலன்ஸ், மூன்று கண்டைனர்ஸ், தங்கமணி, வேலுமணி, அமர் பிரசாத் ரெட்டி என எந்த பெயரையும் கேள்விப்பட்டதில்லையா?...
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
11-ஆக-202217:59:15 IST Report Abuse
Tamilan ஒரு சில இடங்களுக்கு சென்றால் கணக்கில் வராத 56 ஆயிரம் கோடிகளும், மும்பை முழுவதும் 56 லச்சம் கோடிகளும் கணக்கில் வராத பணம் சிக்கும் . அதையெல்லாம் விட்டுவிட்டு , இப்படி ஒன்றுக்கும் பத்துக்கும் அலைவானேன் .
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
11-ஆக-202216:51:17 IST Report Abuse
sankaranarayanan பாரத ரிசர்வ் வங்கியில் ஏதாவது எஞ்சிய பணம் இருக்கிறதா இல்லை பணம் வைக்கும் எல்லா பின்களும் காலியாகிவிட்டனவா? கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு எல்லாத்திசைகளிலும் பணம் நோட்டு நோட்டாக கட்டுக்கள் கிடைத்துள்ளனவே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X