ஹாலிவுட் படங்களை காப்பி அடித்து தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி, கதை, திரைக்கதை அமைப்பது, இந்திய சினிமாவில் சகஜம். அதேபோல் ஹாலிவுட் பிரபலங்கள், செய்யும் சில விசித்திர பழக்கங்களை, இந்திய பிரபலங்கள் பாலோ பண்ணி, தங்கள் சமூக வலை தளத்தில் பகிர்வதுண்டு. அப்படி தான் கப் கேக்கை எப்படி சாப்பிடுவது என தனது ரசிகர்களுக்கு வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி.
![]()
|
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது குறைந்த அளவிலேயே படங்களில் நடித்து வரும் அவர், அண்மையில் தனது மஹா எனும் படத்தில் மூலம் 'அரை சதம்' படங்களை நிறைவு செய்துள்ளார். கடந்த ஆக., 9ல் அவர் தனது 31வது பிறந்த நாளை கொண்டியுள்ளார்.
![]()
|
ஹன்சிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ஹன்சிகா மோத்வானி தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
![]()
|
பிறந்த நாள் கொண்டாடத்தின் தொடர்ச்சியாக கப் கேக்கை எப்படி சாப்பிட வேண்டும் என ரீல்ஸ் வெளியிட, அதுவும் வைரலானது. கப்கேக் சாப்பிடுவது எப்படி என்று ஹாலிவுட் நடிகை அன்ன் ஹாத்வே (Anne Hathway), தனக்கு கற்றுக் கொடுத்துள்ளாதாக குறிப்பிட்டுள்ளார்.
![]()
|
தி ப்ரின்சஸ் டைரிஸ் எனும் ஹாலிவுட் படம் மூலம் பிரமலமான நடிகை அன்ன் ஹாத்வே, இந்த கப் கேக் சாண்ட்விச் எப்படி செய்வது என ஒரு பேட்டியின் போது மக்களுக்கு கற்றுகொடுத்தார். பொதுவாக கிரீம் உள்ள கப் கேக் சாப்பிடும் போது அந்த கிரீம் முகத்தில் ஆங்காங்கே படக்கூடும். அதை தவிர்க்க, கப் கேக்கை இரண்டாக பிரித்து, அதை கேக் சாண்ட்விச் போல செய்து சாப்பிடலாம். ,
பிரபலங்கள் கொடுக்கும் சின்ன சின்ன டிப்ஸும் இப்படி உலகம் முழுவதும் டிரெண்டாவது டெக் உலகில் சகஜம் தானே….Advertisement