போதை பொருட்களை முழுவதுமாக தடுக்க வேண்டும்: துரைமுருகன்

Added : ஆக 11, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
வேலூர்: வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படும் போதைப்பொருட்களை காவல்துறையினர் முழுவதுமாக தடுக்க வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.வேலூரில் இன்று (ஆக.,11) போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு விழா நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று துவக்கி வைத்தார். பின் அவர், செய்தியாளருக்கு அளித்த பேட்டி:
போதை பொருட்களை முழுவதுமாக தடுக்க வேண்டும்: துரைமுருகன்

வேலூர்: வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படும் போதைப்பொருட்களை காவல்துறையினர் முழுவதுமாக தடுக்க வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

வேலூரில் இன்று (ஆக.,11) போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு விழா நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று துவக்கி வைத்தார். பின் அவர், செய்தியாளருக்கு அளித்த பேட்டி: வருங்கால சந்ததியினரை பாதுகாக்க, போதை பொருட்களை தடுப்பு பணிக்காக கட்சிப் பாகுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். சில சமூக விரோதிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதைப்பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

போதைப் பொருட்களை வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படுவதை தடுக்கவும் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் காரணமாகத்தான் தமிழகத்தில் போதை பொருட்களை தடுக்க காவல்துறையினருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி காவல்துறையினர் போதை பொருட்களை முழுவதுமாக தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
11-ஆக-202220:09:17 IST Report Abuse
John Miller துரைமுருகன் ஐயா நீங்கள் உங்கள் துறையை சார்ந்த செய்திகளை பேசுங்கள். காவேரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடி கடலில் கலக்கின்றது. அதேவேளையில் திருமூர்த்தி aணை காய்ந்து கட்டாந்தரையாக கிடக்கின்றது. தம்பிரபரணி - நம்பியாறு திட்டம் எந்த நிலையில் உள்ளது? டெல்டாவில் கால்வாய்களை சிமெண்ட் போட்டு காட்டினாள் வருடம் வருடம் தூர் வார வேண்டாம். அணைகளை எப்போது தூர் வார போகிண்றீர்கள். அத்திக்கடவு அவிநாசி திடடம் இந்த ஜென்மத்திற்குள் நிறைவேறுமா? நீங்கள் அதை எப்போது சென்று பார்வை ஐடா போகிண்றீர்கள்?
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
11-ஆக-202219:09:37 IST Report Abuse
அம்பி ஐயர் எசமான்... இந்த டாஸ்மாக் ல விக்கிறாங்களே..... அது சத்தூ டானிக்கா....???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X