போதை பொருட்களை முழுவதுமாக தடுக்க வேண்டும்: துரைமுருகன்| Dinamalar

போதை பொருட்களை முழுவதுமாக தடுக்க வேண்டும்: துரைமுருகன்

Added : ஆக 11, 2022 | கருத்துகள் (2) | |
வேலூர்: வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படும் போதைப்பொருட்களை காவல்துறையினர் முழுவதுமாக தடுக்க வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.வேலூரில் இன்று (ஆக.,11) போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு விழா நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று துவக்கி வைத்தார். பின் அவர், செய்தியாளருக்கு அளித்த பேட்டி:
போதை பொருட்களை முழுவதுமாக தடுக்க வேண்டும்: துரைமுருகன்

வேலூர்: வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படும் போதைப்பொருட்களை காவல்துறையினர் முழுவதுமாக தடுக்க வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.



வேலூரில் இன்று (ஆக.,11) போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு விழா நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று துவக்கி வைத்தார். பின் அவர், செய்தியாளருக்கு அளித்த பேட்டி: வருங்கால சந்ததியினரை பாதுகாக்க, போதை பொருட்களை தடுப்பு பணிக்காக கட்சிப் பாகுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். சில சமூக விரோதிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதைப்பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.



போதைப் பொருட்களை வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படுவதை தடுக்கவும் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் காரணமாகத்தான் தமிழகத்தில் போதை பொருட்களை தடுக்க காவல்துறையினருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி காவல்துறையினர் போதை பொருட்களை முழுவதுமாக தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X