போர்வெல் மீது கால்வாய்: ஒப்பந்ததாரர் கைது

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
வேலூர்: வேலூரில், போர்வெல் மீது கால்வாய் அமைத்த புத்திசாலி ஒப்பந்ததாரரை போலீசார் இன்று (ஆக.,11) கைது செய்தனர்.வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கால்வாய்கள், சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் வேலூர் சி.எம்.சி., மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் பைக் மீதும், வேலூர் சாய்நாதபுரத்தில் ஜீப் மீதும் சாலை அமைத்த விவகாரத்தில் மாநகராட்சி
வேலூர் ஸ்மார்ட் சிட்டி, போர்வெல் , அடிப்பம்ப், கால்வாய், Vellore Smart City, Borewell,

வேலூர்: வேலூரில், போர்வெல் மீது கால்வாய் அமைத்த புத்திசாலி ஒப்பந்ததாரரை போலீசார் இன்று (ஆக.,11) கைது செய்தனர்.

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கால்வாய்கள், சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் வேலூர் சி.எம்.சி., மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் பைக் மீதும், வேலூர் சாய்நாதபுரத்தில் ஜீப் மீதும் சாலை அமைத்த விவகாரத்தில் மாநகராட்சி துணை பொறியாளர் பழனி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


latest tamil newsஇந்நிலையில், வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் இரண்டாவது தெருவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்பாட்டில் இருந்த 300 அடி போர்வெல் மற்றும் அடிப்பம்பை மீது மக்கள் எதிர்ப்பை மீறி கடந்த ஆக.,5ம் தேதி துணை ஒப்பந்ததாரர் குட்டி சரவணன் என்பவர் கால்வாய் அமைத்துள்ளனர். தகவல் அறிந்த மேயர் சுஜாதா பரிந்துரைபடி துணை ஒப்பந்ததாரர் குட்டி சரவணன் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு பிளாக் லிஸ்டில் வைத்து கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டார். அந்த பகுதி துணை பொறியாளர் செல்வராஜிக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஒப்பந்ததாரிடம் வேலை செய்பவர்கள் போர்வெல்லின் அடிப்பம்பை உடைத்து எடுத்துச் சென்று விட்டனர். இது குறித்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் சத்துவாச்சாரி போலீசார், அரசு சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்து ஒப்பந்ததாரர் சுரேந்திர பாபு என்பவரை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Desi - Chennai,இந்தியா
12-ஆக-202200:26:18 IST Report Abuse
Desi திராவிட மாடல் கால்வாய் போட்டிருக்காரு... இதுல என்னய்யா தப்பு?
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
11-ஆக-202221:02:06 IST Report Abuse
Soumya கட்டிங் கமிஷன் ஓவரா கேட்டுருப்பானுங்களோ
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
11-ஆக-202219:23:50 IST Report Abuse
அம்பி ஐயர் அடுத்து அந்த ஒப்பந்ததாரரின் மனைவி மகன் மகள் பெயரில் காண்ட்ராக்ட் எடுத்து செய்ய வேண்டியது தான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X