வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (41) | |
Advertisement
புதுடில்லி: மத்திய அரசு வசூலிக்கும் வரி எங்கே செல்கிறது என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: நாட்டின் வரலாற்றில், அக்னிபத் திட்டத்தை நியாயப்படுத்திய மத்திய அரசு, வீரர்களுக்கு பென்சன் வழங்க நிதி இல்லாததால் அந்த திட்டத்தை செயல்படுத்துவதாக கூறியுள்ளது. தங்களிடம் பணம் இல்லாததால், மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியை
Arvind Kejriwal,Aam Aadmi Party,Kejriwal,ஆம் ஆத்மி,கெஜ்ரிவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: மத்திய அரசு வசூலிக்கும் வரி எங்கே செல்கிறது என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: நாட்டின் வரலாற்றில், அக்னிபத் திட்டத்தை நியாயப்படுத்திய மத்திய அரசு, வீரர்களுக்கு பென்சன் வழங்க நிதி இல்லாததால் அந்த திட்டத்தை செயல்படுத்துவதாக கூறியுள்ளது. தங்களிடம் பணம் இல்லாததால், மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியை குறைத்துவிட்டதாக மத்திய அரசு திரும்ப திரும்ப கூறி வருகிறது. கடந்த 2014ம் ஆண்டை ஒப்பிடுகையில், வரி வசூல் அதிகமாக உள்ளது. ஆனால், பணம் இல்லை என மத்திய அரசு சொல்கிறது. வசூலாகும் பணம் எங்கே செல்கிறது.


latest tamil news



கடந்த 75 ஆண்டுகளில் உணவு தானியங்களுக்கு வரி வசூலித்தது கிடையாது. பெட்ரோல், டீசல் மீது ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அரசு வழங்கும் அனைத்து இலவசங்களையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு சொல்கிறது. அரசு பள்ளி, மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்க வேண்டும். ரேசன் விநியோகம் நிறுத்தப்பட வேண்டும் எனக்கூறியுள்ளது. மத்திய அரசிடம் உள்ள பணம் எங்கே செல்கிறது. தங்களின் நண்பர்களின் கடனை, அரசின் பணம் மூலம் தள்ளுபடி செய்கின்றனர். கோடீஸ்வரர்களுக்கு வரி சலுகை வழங்குகிறது. இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
12-ஆக-202215:56:52 IST Report Abuse
MARUTHU PANDIAR இவனுக்கு அந்நிய சக்திகளின் தொடர்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதை விசாரணை செய்ய வேண்டும்.++++மக்களை ஏமாற்றுவதற்காக மத்திய அரசு மேல் பழி போடுகிறான்+++பொது மக்களோடு மக்களாக கலந்து அவர்களை கேடயமாக்கி போர் செய்யும் கொரில்லாக்கள் போல் ஏமாற்று வேலைக்கு மக்களை கேடயமாக பயன் படுத்துகிறான்++++அது தான் கேள்வி கேட்கிறான்.
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
12-ஆக-202215:51:50 IST Report Abuse
MARUTHU PANDIAR iva
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
12-ஆக-202211:26:03 IST Report Abuse
JeevaKiran முதலில் இந்த அரசியல் வியாதிகள் அனுபவிக்கும் இலவசங்களை ஒழியுங்கள். இலவச விமான/இரயில் பயணம், டோல்கேட் கட்டணம், கான்டீன், பென்ஷன் (இவர்களுக்கு மட்டும் எப்படி பென்ஷன் தொடர்கிறது) இன்னும் இதுபோன்ற இலவசங்களை ஒழிக்கவேண்டும். நாடு சுபீக்ஷமடையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X