அனைத்து இடத்திலும் அரசியல் பேசினால் தான் நாடு உருப்படும்: சீமான்

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை: அரசியல் என்பது ஒரு வாழ்வியல் என்றும், அனைத்து இடங்களிலும் அரசியல் பேச வேண்டும் என எப்போது சொல்கிறார்களோ அப்போதுதான் நாடு உருப்படும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் கவர்னர் ரவியை சந்தித்து பேசினார். இருவரும் அரசியல் குறித்து பேசியதாக ரஜினி குறிப்பிட்டார். இதற்கு பலரும் பலவாறு கருத்துகளை
NTK, Seeman, Politics, Rajinikanth, Governor, நாம் தமிழர் கட்சி, சீமான், நாதக, அரசியல், ரஜினிகாந்த், கவர்னர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: அரசியல் என்பது ஒரு வாழ்வியல் என்றும், அனைத்து இடங்களிலும் அரசியல் பேச வேண்டும் என எப்போது சொல்கிறார்களோ அப்போதுதான் நாடு உருப்படும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் கவர்னர் ரவியை சந்தித்து பேசினார். இருவரும் அரசியல் குறித்து பேசியதாக ரஜினி குறிப்பிட்டார். இதற்கு பலரும் பலவாறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கவர்னர் ரவியை நியமித்தது யார்? ஆர்எஸ்எஸ் உறுப்பினர் தானே? அப்போது அது சார்ந்த தலைவர்கள் தானே சந்திப்பர். ஆசிரியர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போன்ற கற்றறிந்தவர்கள் தான் அரசியல் பேச வேண்டும். ஆனால் அவர்கள் அரசியல் பேசக் கூடாது என்கின்றனர். அதனால்தான் இந்த அமைப்பு தப்பு என்கிறோம்.


latest tamil news


அரசியல் என்பது ஒரு வாழ்வியல், அனைத்து இடங்களிலும் அரசியல் பேச வேண்டும் என எப்போது சொல்கிறார்களோ, அப்போதுதான் நாடு உருப்படும். ரஜினி கவர்னரை சந்தித்து அரசியல் பேசியதில் தவறில்லை. யார் வேண்டுமானாலும் பேசலாம். மனிதனின் உரிமைக்காக பேசும் அனைத்தும் அரசியல் தான். அந்த உரிமை ரஜினிக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Vijay - bangalore,இந்தியா
13-ஆக-202218:33:28 IST Report Abuse
R Vijay எதுக்கு ஒருத்தன குறை சொன்ன இன்னோருத்தன் அடிப்பான் . இன்னொருத்தனை பாராட்டின மற்றொருவன் திட்டுவான் நேற்றுவரை திராவிட காட்சிகளை potriavarai ரஜினி இளையராஜா லாம் கொண்டாடினாங்க ஹீரோ வா இருந்தாங்க இன்று அவர்கள் ஒரு கருத சொன்னாங்க இவங்களுக்கு சாதகம் இல்லைனு தினமும் தூற்றுறாங்க. மீடியாக்கள் வசை படி வில்லன் ஆகுறாங்க அடியாள் பலம் அக்கிரம கொண்ட அரசியல் மோசமானதாகு தீண்டாமல் போனால் தான் வாழ முடியும் இந்த நாட்டில் அழிக்கப்படவேண்டியது ஜாதி மாதம இல்லை மோசமனான அரசியலும் அரசியல் வாதிகளும் தான். பொதுமக்கள் அரசியலை ஒதுக்கு குடும்பத்துடன் நிம்மதியாக வாழட்டும்
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
12-ஆக-202204:13:02 IST Report Abuse
meenakshisundaram ஒருத்தன் பேச்சை நம்பி ஏமாந்த தமிழன் அவனை அஞ்சு தடவை முதல் அமைச்சர் ஆக்கினான் .இன்னும் அந்த ஆளின் கட்சிக்காரன் மற்றும் வாரிசுகளின் பேச்சுக்கு ஏமாந்து உள்ளான்.இந்த முறை சீமானுக்கும் வரலாம்.இப்போஸு சீமானை நம்பும் மக்கள் புரிஞ்சிக்கணும்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
11-ஆக-202220:57:16 IST Report Abuse
Vena Suna நீங்கள் நன்றாக பேசுகிறீர்கள்.தைரியமும் உண்டு. ஆனால் பொய்கள் நிறைய பேசி,உங்கள் மதிப்பை விட்டு விட்டீர்.ஆமென்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X