பயங்கரவாத போரில் சீனா இரட்டை வேடம் அம்பலம்: இந்தியா காட்டம்

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு தடை விதித்துள்ளதன் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் சீனாவின் இரட்டை நிலைப்பாடும், வேடமும் அம்பலமாகி உள்ளதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார். இவனின் இளைய சகோதரன்
China, block, blacklist, JeM, terror,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு தடை விதித்துள்ளதன் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் சீனாவின் இரட்டை நிலைப்பாடும், வேடமும் அம்பலமாகி உள்ளதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார். இவனின் இளைய சகோதரன் அப்துல் ரவூப். கடந்த 1999 ம் ஆண்டு ஆப்கனுக்கு இந்திய விமானம் கடத்தப்பட்டது, 2001 ல் பார்லிமென்டில் நடந்த தாக்குதல், 2016ல் பதன்கோட் விமான படை தளத்தில் நடந்த தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் இவனுக்கு தொடர்பு உள்ளது. இவனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து, தடை விதிக்கும் வகையில் 15 நாடுகள் உறுப்பினர்களாக கொண்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவும், அமெரிக்காவும் தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்திற்கு 14 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், சீனா மட்டும் இந்த தீர்மானத்திற்கு தொழில்நுட்ப ரீதியில் தடை விதித்துள்ளது.

இதற்கு முன்னர், பாகிஸ்தானை சேர்ந்த மற்றொரு பயங்கரவாதியான அப்துல் ரெஹ்மான் மக்கி என்ற பயங்கரவாதி மீதும் தடை விதிக்க இந்தியாவும், அமெரிக்காவும் கொண்டு வந்த தீர்மானத்திற்கும் சீனா தடை விதித்திருந்தது. இவனுக்கு, மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்பு உள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு ஆட்கள் மற்றும் நிதி திரட்டியது உள்ளிட்டவற்றிலும் ஈடுபட்டுள்ளான். அவர்கள் சர்வதேச அளவில் பயணத்திற்கு தடை விதிக்கவும், பாகிஸ்தானில் உள்ள அவனின் சொத்துகளை முடக்கவும், ஆயுதங்கள் கிடைக்க செய்வதை தடுத்து நிறுத்தவும் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இருவர் மீதும் ஏற்கனவே அமெரிக்கா தடை விதித்துள்ளது.


latest tamil news




இது தொடர்பாக இந்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், சில அரசியல் காரணங்களால் தடைக்குழு தனது கடமையை நிறைவேற்ற முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. சீனாவின் நடவடிக்கையானது, பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச போரில், அந்நாட்டின் இரட்டை வேடம் , நிலைப்பாடு மற்றும் பேச்சு ஆகியவை அம்பலமாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
12-ஆக-202202:34:34 IST Report Abuse
jagan இங்கு ஸ்டெரிலைட் ஆலை மூடலை ஆதரிப்பவர்கள் எல்லோரும் சீன அடிவருடிகளே
Rate this:
Cancel
11-ஆக-202220:15:38 IST Report Abuse
சசிக்குமார் சீனாக்காரன் விக்கிறது 80ஆயுதங்கள் பயங்கரவாதிகளுக்கு. பிறகு எப்படி தடை போடுவான்
Rate this:
Cancel
Yogeshananda - Erode,இந்தியா
11-ஆக-202219:47:58 IST Report Abuse
Yogeshananda உண்டியல் குலுக்கிகள் சீனா அழியனும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X