தமிழக ராணு வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர்| Dinamalar

தமிழக ராணு வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர்

Added : ஆக 11, 2022 | கருத்துகள் (4) | |
சென்னை: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு தமிழக கவர்னர் ரவி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: ஜம்முகாஷ்மீர்
தமிழக ராணு வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர்

சென்னை: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு தமிழக கவர்னர் ரவி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் வீரமரணம் செய்தி கேட்டு வேதனையுற்றேன். அவருடன் வீரமரணம் அடைந்த 3 ராணுவ வீரர்களுக்கும் அஞ்சலி மற்றும் வீரவணக்கத்தை சமர்ப்பிக்கின்றேன். மேலும் தமிழக வீரர் லட்சுமணன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்து உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X