வேலை தேடுவோரிடம் நிறுவனங்கள் எதிர்ப்பார்க்கும் 5 மென்திறன்கள்

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும் என்ற டார்வினின் கோட்பாடு, அது இன்றைய கார்ப்பரேட் உலகிற்கு சரியாக பொருந்தும். நிறுவனங்களில் நிதி அல்லது வேறு ஏதேனும் ஒரு காரணங்களுக்காக வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்களாக இருந்தால், உங்களது கடினமான திறமையை நிரூபித்து காட்ட வேண்டுமென்ற நாட்கள் என்பது மலையேறிவிட்டது. ஒருவரின் வேலை பார்க்கும் திறனை மதிப்பிட, நவீன வணிக
Soft Skills, மென்திறன், Employer, Employee, வேலை,


தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும் என்ற டார்வினின் கோட்பாடு, அது இன்றைய கார்ப்பரேட் உலகிற்கு சரியாக பொருந்தும். நிறுவனங்களில் நிதி அல்லது வேறு ஏதேனும் ஒரு காரணங்களுக்காக வேலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்களாக இருந்தால், உங்களது கடினமான திறமையை நிரூபித்து காட்ட வேண்டுமென்ற நாட்கள் என்பது மலையேறிவிட்டது. ஒருவரின் வேலை பார்க்கும் திறனை மதிப்பிட, நவீன வணிக கட்டமைப்பில், கடினமான திறனோடு, மென்மையான திறனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.


பணி நீக்கத்திற்கு ஆளான நபராக நீங்கள் இருந்தால், விரைந்து மற்றுமொரு வேலையை பெறுவதற்கு உதவும் 5 திறன்கள் குறித்து அறிந்து கொள்வோம்.1. 'இன்பவுண்ட்' அணுகுமுறை :புதிய நிறுவனத்தில் வேலைக்கு முயற்சி செய்யும் போது, நிறுவனத்தின் தேவையை அறிந்து,
உங்களின் மதிப்பு என்ன என்பதை தெளிவாக கடத்த கூடிய திறனை தான் 'இன்பவுண்ட்
அணுகுமுறை' ('in-bound approach' ) என்று கூறுவர். வேலை தேடும் வேளையில், பலர் தங்களது சொந்த திறமையை பற்றி மட்டுமே கூறுவர். அது தவறு. நிறுவனத்தை தொடர்பு கொள்ளும் போது, வேலை சந்தைக்கு ஏற்ற விஷயங்களை முன்வைத்தால், விரைவில் வாய்ப்புக்களை வசமாக்க உதவும்.


latest tamil news2. இணைந்து பணியாற்றும் திறன் :பணியிடங்களில் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற மக்கள் திறன் என்பது அவசியம். மக்கள் திறன்கள், வேலை தேடுவோரை உயர் பதவி மற்றும் சக பணியாளர்களுடன் இணைந்து
வேலையை முடிக்க உதவுகின்றன. நிறுவனங்கள், பணியாளரின் ஆற்றலை எந்தளவு வேலைக்கு பயன்படுத்த முடியுமென்பதில் குறியாக இருப்பர். சுறுசுறுப்புடன் செயலாற்றுவது, விமர்சன ரீதியில் சிந்திப்பது உள்ளிட்டவை சரியான முடிவுகளை எடுக்க உதவும் முக்கியமான பண்புகள். அன்றாடம் மாறிகொண்டே இருக்கும் பணி சூழலில், இவை சிக்கலான பிரச்னைகளை தீர்க்க பணியாளருக்கு உதவும்.


3. பகுத்தறியும் திறன் :பகுத்தறியும் திறன் என்பது அதிகளவில் தேவைப்படும் ஒன்றாக உள்ளது. அதனை தொடர்ந்து
தனிப்பட்ட திறன் வருகிறது. தனிப்பட்ட திறன் என்பது பணியாளருக்கு விலை மதிப்பற்ற திறனாக கருதப்படுகிறது. மன அழுத்தத்தை சமாளிப்பது, தொடர்பு கொள்ளும் திறன், யோசனைகள், சவால்களை சமாளிப்பது, ஒட்டுமொத்த நிறுவனத்தின் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு இது முக்கிய பங்கு வகிக்கிறது.

சுய பச்சாதாபம், உணர்ச்சிகளை திறம்பட நிர்வகித்தல், சிக்கல்களை தீர்ப்பது, சுய மேலாண்மை,
பதவி குறித்து கவலை கொள்ளாமல் நிலையான வளர்ச்சியை அடைய, பணியிடங்களில் நெகிழ்ச்சி தன்மையை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. உணர்ச்சிகளை நிர்வகிக்கும் திறன் மற்றும் குழுவிற்குள் அமைதியான உணர்வை பரப்புதல் ஆகியவை பணியாளரின் வளர்ச்சிக்கு அவசியமான பண்பாகும்.


latest tamil news4. வளர்ச்சி மனோபாவம் :பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு வளர்ச்சி மனோபாவம் அவசியம். வேலைவாய்ப்பு சார்ந்த தளங்களில், இந்த திறனுக்கான தேவை கடந்த 2 ஆண்டுகளில் அதிகளவில் காணப்படுகிறது. வளர்ச்சி மனோபாவம் என்பது ஒருவர் தன்னுடைய திறனை அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மேம்படுத்தவும், கற்றல் என்பது செயல்பாட்டின் ஒருபகுதி என குறிப்பிட்ட முடிவுகளை அடைய முடியுமென்ற நம்பிக்கையுடன் இருப்பது. இதனை டாப் 10ல் முக்கியமான மென்திறனாக குறிப்பிடுகின்றனர்.


5. சிக்கல்களை தீர்ப்பது மற்றும் தகவமைத்தல்:பிரச்னைகளை தாண்டி சிந்திப்பது என்பது நிறுவனங்களுக்கு, உங்களின் புதிய சவால்களை
கையாளும் திறனை காட்டும். பழைய பிரச்னை அல்லது சிக்கல் என்றாலும் அதனை புதுமையான முறையில் சிந்திக்க வேண்டும். சில நிச்சயமற்ற நேரங்களில், ஆக்கப்பூர்வமாக சிக்கல் தீர்க்கும் திறன் என்பது தர்க்கரீதியாகவும் பகுப்பாய்வு ரீதியாகவும் சிந்தித்து திறனை நிரூபிக்க முடியும்.

மற்றுமொரு திறன், குறிப்பாக புதிதாக வேலை தேடுவோருக்கு இருக்க வேண்டிய திறன் தகவமைத்து கொள்ளும் திறனாகும். ஏதேனும் சில திட்டமிடாத தடைகள் ஏற்பட்டாலும் கூட, புதிய சூழலை நன்கு புரிந்து கொண்டு, அதற்கேற்ப மீண்டு வர முடியுமென நம்புவர்களாக இருக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
7sueu -  ( Posted via: Dinamalar Android App )
12-ஆக-202208:29:06 IST Report Abuse
7sueu you should play marketing mind game, on the office....
Rate this:
Cancel
12-ஆக-202207:19:53 IST Report Abuse
N Sasikumar Yadhav பயனுள்ள தகவல்களை கொடுக்க தினமலர் நாளிதழால் மட்டுமே முடியும் தினமலர் நிறுவனத்திற்கு மிக்க நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X