ஆக.24-ல் பீஹார் சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு ?

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
பாட்னா:பீஹாரின் முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் நேற்று பதவியேற்ற நிலையில் வரும் 24-ம் தேதி சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. பீஹாரில் பா.ஜ.,வுடனான கூட்டணியில் இருந்து, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் நேற்று முன்தினம் வெளியேறியது. இதையடுத்து, நிதிஷ்குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.சில மணி நேரங்களிலேயே, முன்னாள்
 Nitish Kumar Wants Trust Vote After 2 Weeks. This Is Why

பாட்னா:பீஹாரின் முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் நேற்று பதவியேற்ற நிலையில் வரும் 24-ம் தேதி சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது.

பீஹாரில் பா.ஜ.,வுடனான கூட்டணியில் இருந்து, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் நேற்று முன்தினம் வெளியேறியது. இதையடுத்து, நிதிஷ்குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.சில மணி நேரங்களிலேயே, முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எட்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். கவர்னர் பகு சவுகான் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


latest tamil newsலாலு பிரசாத் யாதவின் இளைய மகனும், கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவும் பதவியேற்றார்.பீஹார் சட்டசபையில் மொத்தம் 243 உறுப்பினர்களில் நிதிஷ் கூட்டணிக்கு 164 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சபாநாயகராக உள்ள விஜயகுமார் சின்ஹா பா.ஜ.,வைச் சேர்ந்தவர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் சபாநாயகரையும் மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். எனவே வரும் 24-ம் தேதி சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-ஆக-202200:15:18 IST Report Abuse
Kasimani Baskaran ஊழல் செய்வதை இரசிக்க மாட்டார் திருவாளர் நிதிஷ். உடனே பொசுக் என்று கோபம் வரும். அடுத்த காமடி ஆரம்பமாகும். இனி வரும் காலங்களில் மோடியானவர் ஊழல் வாதிகளை சுழுக்கெடுக்க முடிவு செய்துவிட்டதாக சொல்கிறார்கள்.
Rate this:
Cancel
krish - chennai,இந்தியா
11-ஆக-202220:51:47 IST Report Abuse
krish 'விநாச காலே, விபரீத புத்தி' ''தீதும் நன்றும் பிறர்தரா வாரா''
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X