வட்டி உயரும் அச்சத்தால் வீடு விற்பனை அதிகரிக்கும்

Added : ஆக 11, 2022 | |
Advertisement
மும்பை:வீட்டுக் கடனுக்கான வட்டி தொடர்ந்து அதிகரிக்கும் என்ற அச்சத்தால், வீடு வாங்கும் எண்ணம் அதிகரிக்கும் என எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், நாட்டின் வீட்டுக் கடன் சந்தை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:நாட்டின் வீட்டுக் கடன் சந்தை, தற்போது 24 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது,
வட்டி, உயரும்,அச்சத்தால்,வீடு,விற்பனை,அதிகரிக்கும்

மும்பை:வீட்டுக் கடனுக்கான வட்டி தொடர்ந்து அதிகரிக்கும் என்ற அச்சத்தால், வீடு வாங்கும் எண்ணம் அதிகரிக்கும் என எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், நாட்டின் வீட்டுக் கடன் சந்தை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:நாட்டின் வீட்டுக் கடன் சந்தை, தற்போது 24 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, அடுத்த ஆண்டுகளில் இரு மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.வங்கிகள் வழங்கும் கடனில், வீட்டுக் கடனுக்கான பங்களிப்பு, கடந்த மார்ச் மாதத்தில் 13.1 சதவீதமாக இருந்தது. கடந்த ஜூன் மாதத்தில் இது 14.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த கடன்கள் பெரும்பாலும் மூன்றாம் மற்றும் நான்காம் நிலை நகரங்களில் வழங்கப்பட்டு உள்ளன.வீட்டுக் கடனுக்கான வட்டி மேலும் உயரக்கூடும் என்ற அச்சம், அதனால் சொத்துக்களை வாங்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்ற எண்ணம் ஆகியவை, வாடிக்கையாளர்களை வீடுகளில் முதலீடு செய்யத் தூண்டும்.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

கடந்த காலாண்டு முடிவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது, பி.என்.பி., ஹவுசிங் பைனான்ஸ், பஞ்சாப் நேஷனல் பேங்க், எஸ்.பி.ஐ., ஆகிய நிறுவனங்கள், வீட்டுக்கடன் பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளன.ரிசர்வ் வங்கி, கடந்த மே மாதத்திலிருந்து வட்டிவிகிதத்தை 140 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X