நெடுஞ்சாலை துறை கட்டட வளாகம் சீரமைப்பு

Added : ஆக 11, 2022 | |
Advertisement
ஊத்துக்கோட்டை:நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான கட்டட வளாகம், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணி நடந்தது.ஊத்துக்கோட்டை காவல் நிலையம் அருகில், 1989ம் ஆண்டு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில், பயணியர் தங்கும் விடுதி கட்டப்பட்டது.இதில் முக்கிய பிரமுகர்கள் வந்தால் தங்குவதற்கும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஓய்வு எடுப்பதற்காகவும் கட்டப்பட்டது. அடுத்த, 11 ஆண்டுகள்
நெடுஞ்சாலை துறை கட்டட வளாகம் சீரமைப்பு

ஊத்துக்கோட்டை:நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான கட்டட வளாகம், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணி நடந்தது.

ஊத்துக்கோட்டை காவல் நிலையம் அருகில், 1989ம் ஆண்டு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில், பயணியர் தங்கும் விடுதி கட்டப்பட்டது.இதில் முக்கிய பிரமுகர்கள் வந்தால் தங்குவதற்கும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஓய்வு எடுப்பதற்காகவும் கட்டப்பட்டது. அடுத்த, 11 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்தது.பின், 2000ம் ஆண்டில் இருந்து, இந்த பயணியர் விடுதி பொருள் வைப்பு கிடங்காக பயன்படுத்தப்பட்டது.

தற்போது எவ்வித பயன்பாட்டிலும் இல்லாததால், கட்டடத்தின் மேல் செடிகள் வளர்ந்து அதன் உறுதி தன்மை பாதிக்கும் நிலை ஏற்பட்டது.பாம்பு போன்ற விஷப்பூச்சிகள் அதிகளவில் சேர்ந்தன. சமீபத்தில் மாவட்ட உயரதிகாரி ஆய்வின் போது, மேற்கண்ட இடத்தை சீரமைக்க உத்தரவிட்டார். அதையடுத்து, நேற்று, நெடுஞ்சாலைத் துறையினர், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் முட்புதர்களை அகற்றினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X