ஊட்டியில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்த சம்பவம்...விதி மீறி கட்டப்பட்ட நான்கு கட்டடங்களுக்கு சீல்...

Added : ஆக 11, 2022 | |
Advertisement
ஊட்டி அருகே தடுப்பு சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தை அடுத்து அங்கிருந்த விதிமீறி கட்டப்பட்டிருந்தால் நான்கு கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.ஊட்டியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக மழை பெய்து வருகிறது. ஊட்டி -குன்னூர் சாலையில் வேலி வியூ பகுதியில் நேற்று மதியம் தனியார் பகுதியில் இருந்த, 50 அடி கொண்ட கான்கிரீட் தடுப்பு சுவர் திடீரென
 ஊட்டியில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்த சம்பவம்...விதி மீறி கட்டப்பட்ட நான்கு கட்டடங்களுக்கு சீல்...

ஊட்டி அருகே தடுப்பு சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தை அடுத்து அங்கிருந்த விதிமீறி கட்டப்பட்டிருந்தால் நான்கு கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
ஊட்டியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக மழை பெய்து வருகிறது. ஊட்டி -குன்னூர் சாலையில் வேலி வியூ பகுதியில் நேற்று மதியம் தனியார் பகுதியில் இருந்த, 50 அடி கொண்ட கான்கிரீட் தடுப்பு சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அங்கு விதி மீறிய காட்டேஜ்கள் செயல்பட்டு வந்தது. நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பியும் சம்பந்தப்பட்ட உரிமையாளர் தொடர்ந்து காட்டேஜ் நடத்தி வந்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து விடுதிகளில் தங்க வருபவர்களால் அசம்பாவிதத்தை தடுக்கும் நோக்கில் நகராட்சி நிர்வாகம் நேற்று மாலை அங்கிருந்த நான்கு கட்டடங்களுக்கு சீல் வைத்தனர்.
நகராட்சி கமிஷனர் காந்திராஜ் கூறுகையில், வேலி வியூவில் தடுப்பு சுவர் இடிந்த விழுந்த சம்பவத்தை அடுத்து விதி மீறி கட்டப்பட்டிருந்த சீனிவாச ரெட்டி என்பவருக்கு சொந்தமான நான்கு கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. என்றார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X