முக கவசம் கட்டாயம் எதிர்த்த வக்கீலுக்கு அபராதம்

Added : ஆக 11, 2022 | |
Advertisement
சென்னை:பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் என்ற, அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி தாக்கல் செய்த பொது நல மனு: தமிழகம் முழுதும், மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியது. இதையடுத்து, பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்; இல்லையெனில், 500

சென்னை:பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் என்ற, அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி தாக்கல் செய்த பொது நல மனு: தமிழகம் முழுதும், மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியது. இதையடுத்து, பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்; இல்லையெனில், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, ஜனவரி 12ல் அரசாணை வெளியிடப்பட்டது.

முக கவசம் அணிவதால், கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது; மாறாக சுவாசக் கோளாறு உள்ளிட்ட உடல் நலன் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன. பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, சுகாதாரத் துறை அறிவித்திருப்பது தவறானது. அந்த அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'வழக்குக்கு தேவையான உரிய ஆவணங்கள் இணைக்கப்படவில்லை; போதிய ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளாமல் வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது' எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X