மேற்கு வங்க முதல்வர் மம்தா உதவியாளர் கைது ...அடுத்த அதிரடி!

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (18+ 23) | |
Advertisement
கோல்கட்டா :மேற்கு வங்கத்தில் ஊழல் வழக்கில் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்த அதிரடியாக, முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர் அனுபிரதா மொன்டால் கைது செய்யப்பட்டுள்ளார். கால்நடை கடத்தல் வழக்கில் அவரது வீட்டில், 'ரெய்டு' நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் கைது செய்தனர். இதையடுத்து, மத்திய அமைப்புகளின் நெருக்கடி
மேற்கு வங்கம்,  முதல்வர் மம்தா ,உதவியாளர் கைது,அடுத்த அதிரடி!

கோல்கட்டா :மேற்கு வங்கத்தில் ஊழல் வழக்கில் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்த அதிரடியாக, முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர் அனுபிரதா மொன்டால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கால்நடை கடத்தல் வழக்கில் அவரது வீட்டில், 'ரெய்டு' நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் கைது செய்தனர். இதையடுத்து, மத்திய அமைப்புகளின் நெருக்கடி நடவடிக்கைகளால், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் பீதியடைந்துள்ளனர்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. நம் அண்டை நாடான வங்கதேசத்துக்கு, இந்த மாநில எல்லை வழியாக கால்நடைகள் கடத்தப்படுகின்றன. இதை தடுக்கும் பணியில், பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை

பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.


மிகப் பெரிய மோசடி



உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கால்நடைகளுக்கு வங்கதேசத்தில் நல்ல விலை கிடைக்கிறது. அதே நேரத்தில், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கடத்தப்படும் சிறிய கால்நடைகளுக்கு குறைந்த விலையே கிடைக்கிறது.
இவ்வாறு கடத்தப்படும் கால்நடைகளை, எல்லை பாதுகாப்புப் படையினர் அவ்வப்போது பறிமுதல் செய்வர். இதில், மிகப் பெரிய மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது. எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், வியாபாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து, இந்த மோசடியில் ஈடுபட்டனர்.

இதன்படி நல்ல வளர்ந்த கால்நடைகள் பிடிபட்டாலும், சிறிய கால்நடைகள் பிடிபட்டதாக கணக்கு காட்டப்பட்டது. இதற்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டது. பின், இந்த கால்நடைகளை வியாபாரிகள், அதிகாரிகள் உதவியுடன் மீண்டும் வங்கதேசத்துக்கே கடத்தி வந்தனர்.
இதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது, 2018ல் வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.இந்த வழக்கில், எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதில் சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.


சி.பி.ஐ., ரெய்டு



குறிப்பாக, திரிணமுல் காங்.,கின் பிர்பம் மாவட்டத் தலைவர் அனுபிரதா மொன்டாலுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.கால்நடை கடத்தல்காரர்களிடமிருந்து பணம் பெற்று, அவர்களை பாதுகாத்ததில் மொன்டால் முக்கிய பங்காற்றியது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில், மொன்டாலின் உதவியாளர்கள் உட்பட சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, கடந்த மூன்று நாட்களில் இரண்டு முறை 'சம்மன்' அனுப்பப்பட்டும், அனுபிரதா மொன்டால் ஆஜராகவில்லை.


இதையடுத்து, அவருடைய வீடு உள்ளிட்ட இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்; பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், விசாரணைக்கு ஒத்துழைக்காததால், அவரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.திரிணமுல் காங்., துவக்கப்பட்டதில் இருந்து, அக்கட்சியில் இருந்து வரும் அனுபிரதா மொன்டால், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார். இவரை, 'பிர்பம் பாகுபலி' என்றே கட்சியினர் அழைக்கின்றனர்.இதற்கிடையே, 'மொன்டாலுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவருக்கு 14 நாட்கள் ஓய்வு தேவை' என, போல்புரைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் சான்றிதழ் அளித்துள்ளார். போலி மருத்துவச் சான்றிதழ் அளித்ததற்காக அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.''ஊழல் விவகாரத்தில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை.

அனுபிரதா மொன்டால் விவகாரத்தில் முழுமையான தகவல் கிடைத்ததும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கட்சியின் எம்.பி., சாந்தனு சென் கூறியுள்ளார்.''திரிணமுல் காங்., மூத்த தலைவர்கள் ஊழலில் திளைத்துள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மம்தா பானர்ஜி பதிலளிக்க வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய துணைத் தலைவர் திலிப் கோஷ் கூறியுள்ளார்.


சமீபத்தில், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவரான, தொழில் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜி, ஆசிரியர் நியமன மோசடி வழக்கில், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு மிகவும் நெருக்கமான தோழியும், நடிகையுமான அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து, 50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் பார்த்தா சட்டர்ஜி நீக்கப்பட்டார்.
இந்நிலையில், மம்தாவுக்கு மிகவும் நெருக்கமானவரான அனுபிரதா மொன்டால் கைது செய்யப்பட்டுள்ளது, ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

எம்.எல்.ஏ., வீட்டில் சோதனை

ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், 75 லட்சம் ரூபாயுடன் சமீபத்தில் மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் கைது செய்யப்பட்டனர்.ஜார்க்கண்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அவர்கள் இந்தத் தொகையுடன் வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, மேற்கு வங்க சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.,க்களில் ஒருவரான இர்பான் அன்சாரியின் ஜார்க்கண்டின் ஜம்தாராவில் உள்ள வீட்டில், மேற்கு வங்க போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில், 5 லட்சம் ரூபாய், பணக் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டன.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18+ 23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
12-ஆக-202220:12:29 IST Report Abuse
Ramesh Sargam மமதா "இது பாஜகவின்" சதி என்று எப்பொழுதும்போல்இட்டிருப்பாரே..
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
12-ஆக-202217:31:37 IST Report Abuse
DVRR எங்களுக்கு சுதந்திரம் தேவை "திருட" "கொள்ளையடிக்க" "ஊழல் செய்ய" "உளர " "எப்போதும் பிரதமர் தவறு என்று சொல்ல" இப்படிக்கு முஸ்லீம் ஜவாஹிருல்லா (ஜவஹர்லால் உண்மையான பெயராக இது தான் இருந்திருக்கவேண்டும்) நேரு காங்கிரஸ் முதல், திமுக, திரிணாமூல் காங்கிரஸ்.....எல்லா எதிரிக்கட்சிகள் வரை
Rate this:
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
12-ஆக-202213:09:38 IST Report Abuse
Vaduvooraan திருடறதுக்கு கூட சுதந்திரம் இல்லாத நாட்டுல எதுக்கு சுதந்திர தின விழா இவ்வ்வளவு தடபுடலா கொண்டாடணும்னு சொல்றாங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X