எக்ஸ்குளுசிவ் செய்தி

தி.மு.க., பொதுக்குழு தள்ளிப்போவது ஏன்?

Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
தி.மு.க., மாவட்ட செயலர் தேர்தல் முடிவடையாததால், வரும் 28ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த பொதுக்குழு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. செப்., 15ல், விருதுநகரில் நடக்கும் முப்பெரும் விழாவுக்கு பின், நடத்த ஆலோசிக்கப்பட்டு உள்ளது.தி.மு.க.,வில் ஒன்றிய செயலர், நகர செயலர் தேர்தல் முடிவடைந்த பின், தற்போது, மாநகராட்சி வட்ட செயலர், பகுதி செயலர் தேர்தல் நடந்து வருகிறது. மாவட்ட செயலர்
 தி.மு.க., பொதுக்குழு  தள்ளிப்போவது ஏன்?



தி.மு.க., மாவட்ட செயலர் தேர்தல் முடிவடையாததால், வரும் 28ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த பொதுக்குழு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. செப்., 15ல், விருதுநகரில் நடக்கும் முப்பெரும் விழாவுக்கு பின், நடத்த ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க.,வில் ஒன்றிய செயலர், நகர செயலர் தேர்தல் முடிவடைந்த பின், தற்போது, மாநகராட்சி வட்ட செயலர், பகுதி செயலர் தேர்தல் நடந்து வருகிறது. மாவட்ட செயலர் தேர்தல் இன்னும் துவங்கவில்லை.சென்னையில் உள்ள மாவட்டங்களில், இன்னும் பகுதி செயலர் தேர்தல் துவங்கவில்லை. வரும் 15ம் தேதி, சுதந்திர தின விழா கொண்டாட்டம் முடிந்த பின், மாவட்ட செயலர் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மாவட்ட செயலர் தேர்தல் பத்து நாட்கள் வரை நீடிக்கும் என்பதால், வரும் 28ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதற்கிடையில், அண்ணாதுரை பிறந்த நாள், ஈ.வெ.ராமசாமி பிறந்த நாள், தி.மு.க., துவங்கிய நாள் என, முப்பெரும் விழாவை, செப்., 15ல் விருதுநகரில் நடத்த, ஆளும் கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.

இந்த விழாவில், கட்சியின் முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கப்படும். விருது பெறுவோர் பட்டியல் தயாராகி வருகிறது. முப்பெரும் விழா நடப்பதற்கு முன், செப்., முதல் வாரத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தலாமா அல்லது மூன்றாவது வாரத்தில் நடத்தலாமா என்பது குறித்து, தி.மு.க., மேலிடம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது. - நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jss -  ( Posted via: Dinamalar Android App )
12-ஆக-202218:13:08 IST Report Abuse
jss தள்ளிப்போவது என்பதெல்லாம் தனிப்பட்ட காரணத்திற்காக. சொல்லப்படும் காரணங்கள் பொதுமக்களுக்காக. முப்பெரும விழாவிற்க்கு பிறகு மூடு விழா நடத்தட்டுமே அதைப்பற்றி எவரும் கவலைப்படப்போவதில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X