தினமலர் நாளிதழ் செய்தியை சுட்டிக்காட்டி போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

Added : ஆக 12, 2022 | |
Advertisement
சிவகாசி : சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லுாரியில் நடந்த போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு போட்டியில் மாணவி தினமலரில்வந்த செய்தியை சுட்டிக்காட்டி விளக்கினார்.போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு வாரம் ஆக. 12 முதல் ஆக. 18 வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி சிவகாசி எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லுாரியில் உடற் கல்வித் துறை சார்பில் கவிதை, ரங்கோலி, விளக்க காட்சி வழங்குதல் (பவர்
தினமலர் நாளிதழ் செய்தியை சுட்டிக்காட்டி போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

சிவகாசி : சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லுாரியில் நடந்த போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு போட்டியில் மாணவி தினமலரில்வந்த செய்தியை சுட்டிக்காட்டி விளக்கினார்.

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு வாரம் ஆக. 12 முதல் ஆக. 18 வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி சிவகாசி எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லுாரியில் உடற் கல்வித் துறை சார்பில் கவிதை, ரங்கோலி, விளக்க காட்சி வழங்குதல் (பவர் பாயிண்ட் பிரசன்டேஷன்) போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லுாரி முதல்வர் பழனீஸ்வரி துவக்கி வைத்தார்.

வணிகவியல் துறை மாணவி அக் ஷா நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் மாத்திரை மாபியா பணத்திற்காக இளைஞர்களை சீரழிக்கும் கும்பல் அதிகரிக்கும் போதை மாத்திரை கலாசாரம் என்ற தலைப்பில் வெளிவந்த செய்தியை சுட்டிக்காட்டி போதைப் பொருளினால் இளைஞர்கள் படும் இன்னல்களை விளக்கக் காட்சி மூலமாக விளக்கினார். மாணவிகள் ஆர்வமாக பங்கேற்றனர்.. ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் விஜயகுமாரி செய்திருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X