இலவசம் குறித்து கருத்து : கெஜ்ரிவாலுக்கு நிர்மலா சீதாராமன் எதிர்ப்பு

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி: ''இலவச கல்வி, மருத்துவம் வழங்குவதும் கட்சிகளின் இலவச அறிவிப்பா என்று கேட்டதன் மூலம், விபரீதமான திருப்பத்தை ஏற்படுத்த புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சிக்கிறார்,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.'தேர்தலின்போது அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகள் வெளியிடுவது நாட்டின் பொருளாதாரத்துக்கு பேரழிவை
இலவசம் ,கருத்து,கெஜ்ரிவால் நிர்மலா சீதாராமன் எதிர்ப்பு

புதுடில்லி: ''இலவச கல்வி, மருத்துவம் வழங்குவதும் கட்சிகளின் இலவச அறிவிப்பா என்று கேட்டதன் மூலம், விபரீதமான திருப்பத்தை ஏற்படுத்த புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சிக்கிறார்,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

'தேர்தலின்போது அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகள் வெளியிடுவது நாட்டின் பொருளாதாரத்துக்கு பேரழிவை ஏற்படுத்துகிறது' என, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் குறிப்பிட்டார்.இலவச அறிவிப்புகள் தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


latest tamil news



இந்நிலையில், புதுடில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், 'இலவச கல்வி, மருத்துவம் வழங்குவது குறித்தும் விவாதிக்க வேண்டும்' என, கருத்து தெரிவித்திருந்தார்.

இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கூறியதாவது:
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை எந்த ஒரு அரசும், மக்களுக்கு இலவச கல்வி, மருத்துவம் அளிப்பதை, இலவச அறிவிப்பாக கூறியதில்லை. தற்போது இது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று கூறியதன் மூலம், ஏழை, எளிய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சிக்கிறார்.

இலவச அறிவிப்புகள் பிரச்னையில் விபரீதமான திருப்பத்தை ஏற்படுத்த அவர் முயற்சிக்கிறார். இந்தப் பிரச்னை தொடர்பாக அனைத்து தரப்பினரும் ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஆக-202215:08:10 IST Report Abuse
அப்புசாமி இலவசம் கூடாதுங்கறவங்க, நாம ஓட்டுக்கு ரெண்டாயிரம் வாங்குனா தப்புங்கறாங்களே? எங்க ஓட்டு மட்டும் இலவசமா வேணுமா? அதுவும் நீங்க சொகுசா வாழுறதுக்கு?
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
12-ஆக-202212:14:40 IST Report Abuse
Dharmavaan இலவசங்கள் மோடி சொத்திலிருந்து கொடுக்கவில்லை.ஜனாதிபதி முதல் MP MLA சலுகைகளை நிறுத்தட்டும் மத சார்பான இலவசங்களை நிறுத்தட்டும்
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
12-ஆக-202211:24:54 IST Report Abuse
S.Baliah Seer கல்வியும் ,மருத்துவமும் தனியார் மயம் ஆனபின் அவற்றை இலவசமாக வழங்குவேன் என்று சொல்லும் அரசியல் வாதியை மக்கள் முச்சந்தியில் நிற்கவைத்து சவுக்கால் அடிக்க முடியாது.நீதி மன்றங்கள் இந்த மாதிரி தில்லுமுல்லு அறிவிப்புக்களைத் தடை செய்யவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X