உணவு சரியில்லை உ.பி., போலீஸ் கண்ணீர்

Added : ஆக 12, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
பிரோசாபாத் :உத்தர பிரதேசத்தில் ''விலங்கு கூட சாப்பிடாத, வேகாத உணவை தருகின்றனர்,'' என போலீஸ் கான்ஸ்டபிள் புகார் கூறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு, பிரோசாபாத் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் பணிபுரியும் கான்ஸ்டபிள் மனோஜ்குமார், ''மெஸ்சில் வேகாத சப்பாத்தியையும்,
உணவு சரியில்லை உ.பி., போலீஸ் கண்ணீர்

பிரோசாபாத் :உத்தர பிரதேசத்தில் ''விலங்கு கூட சாப்பிடாத, வேகாத உணவை தருகின்றனர்,'' என போலீஸ் கான்ஸ்டபிள் புகார் கூறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு, பிரோசாபாத் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் பணிபுரியும் கான்ஸ்டபிள் மனோஜ்குமார், ''மெஸ்சில் வேகாத சப்பாத்தியையும், தண்ணீர் கலந்த பருப்பையும் உணவாக தருகின்றனர்.''இவற்றை விலங்குகள் கூட சாப்பிடாது.


latest tamil news


உயர் அதிகாரிகளிடம் பல முறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை,'' என கண்ணீர் விட்டு அழுதபடி புகார் கூறியுள்ளார். அவர் அழும் காட்சிகளை, சிலர் 'வீடியோ' எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இது வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், பிரோசாபாத் மாவட்ட போலீஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கான்ஸ்டபிள் மனோஜ் குமார் ஒழுங்காக பணிக்கு வர மாட்டார். அவர் மீது இதுவரை 15 முறை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, போலீசாருக்கு வழங்கும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nisar ahmad -  ( Posted via: Dinamalar Android App )
12-ஆக-202216:52:00 IST Report Abuse
nisar ahmad சாப்பாடு சரியில்லை என்று குறை கூறினால் அதை பற்றி பேசாமல் அவன் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறதூ ஆரியமாடர் அரசு அன்று ரானுவ வீரர் குறை கூறினார் அவர் மேல் பஜக மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது இன்று அதையே மாநில பஜக அரசு செய்கிறது ஆக மொத்தத்தில் பஜக ஆட்சியில் என்ன தவறு இருந்தாலும் மூடிக்கிட்டு போய்கிட்டே இருக்கனும் .இதை ஜனநாயக அரசு என்பதா சர்வாதிகார அரசு என்பதா?
Rate this:
Cancel
மண்டகசாயம் - மார்த்தாண்டம்,இந்தியா
12-ஆக-202210:39:15 IST Report Abuse
மண்டகசாயம் என்ன இது வருங்கால பிரதமர் வேட்பாளருக்கு வந்த சோதனை
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
12-ஆக-202208:34:48 IST Report Abuse
amuthan இதற்கும் திராவிட மாடல் தான் காரணம் என்று மெசேஜ் போட்டு இரண்டு ரூபாய்க்காக காத்திருக்கும் மக்களை இங்கு பார்க்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X