லோக்சபா தேர்தலுக்காக பா.ஜ.,வில் மாற்றம் : தேசிய பொதுச்செயலராக பன்சால் நியமனம்

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: லோக்சபா தேர்தலுக்காக, கட்சி கட்டமைப்பில் சில அடிப்படையான மாற்றங்களை, பா.ஜ., தலைமை செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, பா.ஜ., தேசிய பொதுச்செயலராக, ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர் சுனில் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 2014, 2019 லோக்சபா தேர்தலில் தொடர்ச்சியாக வென்ற பா.ஜ., வரும் 2024 லோக்சபா தேர்தலிலும் வென்று, 'ஹாட்ரிக்' சாதனை படைக்க வேண்டும் என்று களமிறங்கியுள்ளது. அதற்கு
லோக்சபா தேர்தல், பா.ஜ.,  மாற்றம் : தேசிய பொதுச்செயலராக பன்சால் நியமனம்

சென்னை: லோக்சபா தேர்தலுக்காக, கட்சி கட்டமைப்பில் சில அடிப்படையான மாற்றங்களை, பா.ஜ., தலைமை செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, பா.ஜ., தேசிய பொதுச்செயலராக,
ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர் சுனில் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2014, 2019 லோக்சபா தேர்தலில் தொடர்ச்சியாக வென்ற பா.ஜ., வரும் 2024 லோக்சபா தேர்தலிலும் வென்று, 'ஹாட்ரிக்' சாதனை படைக்க வேண்டும் என்று களமிறங்கியுள்ளது.
அதற்கு முதல் கட்டமாக, கட்சியின் அடிப்படை கட்டமைப்பில் மாற்றங்களை செய்யத் துவங்கியுள்ளது.


ஆர்.எஸ்.எஸ்., ஊழியர்



latest tamil news




பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர், மாநில அமைப்பு பொதுச்செயலர்கள், ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களாக இருக்க வேண்டும் என்ற மரபை, அக்கட்சி பின்பற்றி வருகிறது. தேசிய அமைப்பு பொதுச்செயலர் பதவி என்பது தேசிய தலைவருக்கும், மாநில அமைப்பு பொதுச்செயலர் பதவி, மாநில தலைவருக்கும் இணையானது. பா.ஜ.,வின் உச்சபட்ச அதிகாரம் உள்ள அமைப்பான, 'பார்லிமென்ட் போர்டு' குழுவில் அமைப்பு பொதுச்செயலர் இடம் பெற்று விடுவார். தற்போது இந்த குழுவில் பிரதமர் மோடி, தேசிய தலைவர் நட்டா, முன்னாள் தேசிய தலைவர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான், தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் ஆகிய ஏழு பேர் மட்டுமே உள்ளனர்.
இக்குழு தான் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்தது.ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபேலே, பா.ஜ., பொறுப்பாளரான, ஆர்.எஸ்.எஸ்., இணைப் பொதுச்செயலர் அருண்குமார் ஆகியோருடன், நட்டா, சந்தோஷ் ஆகியோர், பா.ஜ., அமைப்பு பொதுச்செயலர்கள் நியமனம் பற்றி, கடந்த மாதம் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.


வேண்டுகோள்



அதைத் தொடர்ந்து, ஜூலை 22-ம் தேதி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், பஞ்சாப், கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் மாநில அமைப்பு பொதுச்செயலர்கள் மாற்றப்பட்டனர். கர்நாடகா மாநில அமைப்பு பொதுச்செயலர் அருண்குமார் விடுவிக்கப்பட்டு, 37 வயதான ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

செயல்படாதவர்களை மாற்றி விட்டு, துடிப்புடன் செயல்படும், 'பிரசாரக்' என்றழைக்கப்படும், முழுநேர ஊழியர்களை, அமைப்பு பொதுச்செயலர் பணிக்கு அனுப்புமாறு, நட்டா, சந்தோஷ் ஆகியோர் வேண்டுகோள் விடுத்ததாக, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் முக்கிய மாற்றமாக, பா.ஜ. தேசிய பொதுச்செயலராக சுனில் பன்சால், நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மேற்கு வங்கம், ஒடிசா, தெலுங்கானா ஆகிய மாநில பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. ராஜஸ்தானை சேர்ந்த இவர், ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர். ஒன்பது ஆண்டுகளாக உத்தரப் பிரதேச மாநில பா.ஜ., அமைப்பு பொதுச்செயலராக பணியாற்றியவர். 2014 முதல் உத்தர பிரதேசத்தில் பா.ஜ.,வின் தொடர் வெற்றிக்கு பின்னால், பன்சாலின் கடும் உழைப்பும், திட்டமிடலும், சாதுர்யமும் உள்ளது என்கின்றனர்.


மூன்று மாநில பொறுப்பு



ஏற்கனவே, சந்தோஷ், தேசிய இணை அமைப்பு பொதுச்செயலர் சிவ்பிரகாஷ் ஆகிய ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்கள் பா.ஜ.,வில் இருக்கும் நிலையில், மேலும் ஒரு ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர் தேசிய அரசியலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.கடந்த 1998-ல் வாஜ்பாய் தலைமையில் பா.ஜ., கூட்டணி அரசு இருந்தபோது தான், குஜராத் மாநில பா.ஜ., அமைப்பு பொதுச்செயலராக இருந்த நரேந்திர மோடி, தேசிய பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். அதுபோல, தற்போது, உத்தர பிரதேசத்தில் வெற்றிகரமாக செயல்பட்ட பன்சால், தேசிய அரசியலுக்கு வந்துள்ளார்.மேற்கு வங்கம், ஒடிசா, தெலுங்கானா ஆகிய மூன்று மாநில பொறுப்புகள், சுனில் பன்சாலுக்கு வழங்கப்பட்டிருந்தாலும்,
இனி பா.ஜ.,வில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அனைத்திலும், அவரது பங்களிப்பு இருக்கும். எனவே, இது மிக மிக முக்கியமான முடிவு என்று, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
12-ஆக-202216:02:32 IST Report Abuse
venugopal s உங்கள் சுனில் பன்ஸால் அவர்கள் அவ்வளவு பெரிய பிஸ்தா என்றால் தமிழ்நாட்டில் பாஜகவை வெற்றி பெறச் செய்ய வையுங்கள் பார்க்கலாம்.
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
12-ஆக-202205:27:05 IST Report Abuse
தியாகு காட்சின்னா இப்படி இருக்கணும். நம்ம திருட்டு திமுகவிற்கு கட்டுமர குடும்பத்தை விட்டால் ஆளில்லை, நம்ம ஊழல் காங்கிரஸுக்கு நேரு மாமா குடும்பத்தை விட்டால் ஆளில்லை. விளங்கிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X