அடங்காத சீனா அனுப்பியது கப்பலை இலங்கையை நெருங்கியது

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
இலங்கை :இந்தியா மறுத்தும் கேட்காமல் சீன உளவு கப்பல் 'யுவான் வாங் 5' இலங்கை அம்பன்தோட்டா துறைமுகம் நோக்கி வந்துள்ளது. ஆனால் அந்த கப்பல் அம்பன்தோட்டாதுறைமுகத்துக்கு வராது என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நம் அண்டை நாடான சீனாவின் 'யுவான் வாங் 5' என்ற உளவு கப்பலை, இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் ஆக., 11 - 17 வரை நிறுத்திவைக்க சீனா திட்டமிட்டது. விண்வெளி
அடங்காத சீனா அனுப்பியது கப்பலை இலங்கையை நெருங்கியது

இலங்கை :இந்தியா மறுத்தும் கேட்காமல் சீன உளவு கப்பல் 'யுவான் வாங் 5' இலங்கை அம்பன்தோட்டா துறைமுகம் நோக்கி வந்துள்ளது. ஆனால் அந்த கப்பல் அம்பன்தோட்டாதுறைமுகத்துக்கு வராது என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நம் அண்டை நாடான சீனாவின் 'யுவான் வாங் 5' என்ற உளவு கப்பலை, இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் ஆக., 11 - 17 வரை நிறுத்திவைக்க சீனா திட்டமிட்டது.


latest tamil newsவிண்வெளி மற்றும் செயற்கைக்கோளை கண்காணிக்கும் இந்த உளவு கப்பலை இலங்கையில் நிறுத்துவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால் மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்தது. இதை ஏற்று, கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிறுத்த அந்நாட்டு அரசு மறுத்ததாக தகவல் வெளியானது.
ஆனாலும், சீன உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தை நோக்கி தொடர்ந்து பயணிப்பதாக கூறப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி, அம்பன்தோட்டா துறைமுகத்திலிருந்து 600 கடல் மைல் தொலைவில் அந்த கப்பல் இருப்பதாக கூறப்பட்டது.
இது குறித்து இலங்கை துறைமுக அதிகாரிகள் கூறியதாவது:சீன உளவு கப்பல், ஏற்கனவே திட்டமிட்டபடி அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வர வாய்ப்பில்லை. எங்கள் அனுமதியின்றி, எந்த கப்பலும் எங்கள் துறைமுகத்துக்குள் நுழைய முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.ஆனாலும், சீன கப்பல் இலங்கைக்கு வருமா, வராதா என்பது குறித்து உறுதியான எந்த தகவலையும் தெரிவிக்க துறைமுக அதிகாரிகள் மறுத்து
விட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
12-ஆக-202212:02:46 IST Report Abuse
ponssasi ஒரு அடிமை (இலங்கை) எப்படி எசமானருக்கு (சீனா) உத்தரவு போடமுடியும்.
Rate this:
Cancel
CBE CTZN - Coimbatore,இந்தியா
12-ஆக-202210:47:16 IST Report Abuse
CBE CTZN இன்னும் எத்தனை வருடங்களுக்கு நம் இந்தியா ஆட்சேபனையும் கண்டனத்தையும் தெரிவித்து கொண்டு இருப்பது... பாகிஸ்தானுடன் துணிவுடன் மோதும் நாம், எனோ இந்த சீன குள்ளையனை பார்த்து பம்முகிறோம்.. நம் நாட்டின் பாதுகாப்பில் சமரசம் கூடாது..
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
12-ஆக-202212:37:41 IST Report Abuse
Rajaசீனாவையும் பாகிஸ்தானையும் ஒண்ணா கருத முடியாது. எல்லோரிடமும் ஒரே யுத்தியை கையாள முடியாது....
Rate this:
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
12-ஆக-202209:49:52 IST Report Abuse
R Ravikumar நாம் நமது உளவு கப்பலை, (ஜாமர் கருவி வசதி கொண்டது) கம்பன் தோட்ட துறைமுகத்திற்கு அனுப்பாமல்.. சற்று தொலைவில் நிலை நிறுத்தி வைக்க வேண்டும். கண்காணிக்க முயற்சிக்க வேண்டும், குறைந்த பட்சம்.. அவர்களின் தகவல்களை குழப்ப வேண்டும். அரைகுறை தகவல்களை ஒளி பரப்பவேண்டும். நமது உளவு துறை முன்கூட்டியே இப்படி யோசித்து இருப்பார்கள் என்று நம்புகிறேன். ரஷ்யா, அமெரிக்கா கப்பல்கள் இப்படி விளையாட்டு விளையாடுவார்கள். ரஷ்யா கப்பல் தகர்க்க பட்டதாக.. அமெரிக்கா நீர் மூழ்கி கப்பலுக்கு ரஷ்யா வெ பொய் தகவல் கொடுக்கும். தகவல் அமெரிக்கா கப்பலில் இருந்து அனுப்பப்பட்டதாக தான் தெரியும். மண்டையை பிச்சி கொள்வார்கள். அறுபது எழுபது காலகட்டத்தில் இப்படி நடந்தாக படித்து இருக்கிறேன்.
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
12-ஆக-202212:51:31 IST Report Abuse
Rajaநண்பரே அறுபது எழுபதுகளில் நடந்த நிகழ்வுகளை வைத்து இன்று எப்படி செயல்பட முடியும். இன்று உள்ள தொழில்நுட்பம் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த மாதிரி சின்ன பிள்ளை தனமான விளையாட்டெல்லாம் இன்று வேலைக்காகாது. அது சரி. கம்பன் தோட்டம் எங்கு இருக்கு. சீனக்காரன் அந்த துறைமுகத்தை 99 வருஷத்துக்கு குத்தகைக்கு எடுத்திருக்காங்க. அதுநால அவன் கப்பலை அங்கு நிறுத்துவான். நாம வேணா தூத்துகுடில நிறுத்தலாம். அதை தாண்டி போனா சர்வதேச எல்லை வந்துரும். அங்க நம்ம கப்பலை நிறுத்த முடியாது....
Rate this:
R Ravikumar - chennai ,இந்தியா
12-ஆக-202217:24:40 IST Report Abuse
R Ravikumarஎன்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் .. அதே பழைய ராணுவ தந்திரம் தான் . செயல் முறை தான் வேறு . உளவு கப்பல் எங்கு வேண்டுமானாலும் செல்லும் .. இதை எல்லாம் charted log இல் குறிப்பு வைத்து கொண்டு செல்ல முடியாது . துறைமுகத்தில் தான் நிறுத்த முடியாது . இந்த உளவு விளையாட்டு பொழுதுபோக்கு அல்ல .. எதிரியின் உளவு திறனை அப்படி தான் அறிந்து கொள்ள முடியும் . நமது நீர்மூழ்கி கப்பல் பல முறை கராச்சி துறை முகத்தை நெருங்கி வேவு பார்க்கும் . எதனை முறை பாக்கிஸ்தான் கண்டுபிடிக்கிறது என்று சோதனை செய்வார்கள் . ஒரு முறை கூட பார்க்கவில்லை என்றால் சோதனை வெற்றி என்று அர்த்தம் . ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளை விசாரித்து பாருங்கள் .. ரொம்ப இன்டெரெஸ்ட்டிங் ஆக இருக்கும் . கொஞ்ச நாள் முன்பு .. நமது ( ப்ரம்மோஸ் என்று நினைக்கிறேன் ) ஏவுகணை ஒன்றை அதிகார பூர்வமாக இல்லது ஏவினார்கள் . பாகிஸ்தான் கண்டுபிடிக்க முடியாமல் நம்மிடம் கோபப்பட்டது . தொழில் நுட்ப கோளாறு என்று நம் மக்கள் கதை சொன்னார்கள் . உண்மை என்னவென்றால் .. அவர்கள் கண்டறியும் திறனை நமது ராணுவம் சோதித்தது ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X