விமானத்தில் புகைபிடித்த சம்பவம் : விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி :சமூக வலைதளத்தில் பிரபலமான பாபி கட்டாரியா என்பவர், விமானத்தின் இருக்கையில் படுத்தபடி சிகரெட் பற்ற வைக்கும் 'வீடியோ' சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 'இன்ஸ்டாகிராம்'உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமான பாபி கட்டாரியாவை, 6.30 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கின்றனர். இவர், சமீபத்தில் 'ஸ்பைஸ்ஜெட்' விமான இருக்கையில் படுத்தபடி சிகரெட்டை பற்ற வைத்து
விமானம், புகைபிடித்த சம்பவம் :  விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு


புதுடில்லி :சமூக வலைதளத்தில் பிரபலமான பாபி கட்டாரியா என்பவர், விமானத்தின் இருக்கையில் படுத்தபடி சிகரெட் பற்ற வைக்கும் 'வீடியோ' சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

'இன்ஸ்டாகிராம்'

உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமான பாபி கட்டாரியாவை, 6.30 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கின்றனர். இவர், சமீபத்தில் 'ஸ்பைஸ்ஜெட்' விமான இருக்கையில் படுத்தபடி சிகரெட்டை பற்ற வைத்து புகைபிடிக்கிறார்.


latest tamil news



இந்த வீடியோ வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.'இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, 'சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி' அமைப்பு தெரிவித்து உள்ளது.இது பற்றி மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறுகையில், ''விதிகளை மீறி, விமானத்திற்குள் சிகரெட் புகைத்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அபாய நடத்தையை ஒருபோதும் ஏற்க முடியாது,'' என்றார். ஆனால், கட்டாரியா தன் செயலை ஆதரிப்பது போல் பேசி வருகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஆக-202212:07:17 IST Report Abuse
theruvasagan அந்த தத்தாரிக்கு லைக் போட்ட அந்த ஆறு லட்சம் பேர் கணக்கையும் மூணு மாசம் முடக்கி வையுங்க.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
12-ஆக-202212:07:15 IST Report Abuse
duruvasar இவரைப்பற்றிய முழு விவரமும் தெரியாமல் இவர் செயல் சமூக நீதிக்கு எதிரானதா, தனி மனித சுதந்திரம் பற்றியதா என அரிதியிட்டு கூற முடியாது . ,
Rate this:
Cancel
12-ஆக-202210:52:43 IST Report Abuse
தமிழ் இவனுங்களுக்கெல்லாம் அறிவே இருக்காதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X