தாய்லாந்து சென்றார் இலங்கை 'மாஜி' அதிபர் கோத்தபய ராஜபக்சே

Added : ஆக 12, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சிங்கப்பூர் : இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, ஆசிய நாடான சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு சென்றார்.நம் அண்டை நாடான இலங்கையில், மக்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, நாட்டில் இருந்து தப்பினார். ஆசிய நாடான மாலத் தீவுகளுக்கு, ஜூலை 13ம் தேதி சென்றார். அங்கிருந்து சிங்கப்பூர் சென்ற அவர், அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக
Thailand, Gotabaya Rajapaksa, Gotabaya, Rajapaksa

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சிங்கப்பூர் : இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, ஆசிய நாடான சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு சென்றார்.

நம் அண்டை நாடான இலங்கையில், மக்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, நாட்டில் இருந்து தப்பினார். ஆசிய நாடான மாலத் தீவுகளுக்கு, ஜூலை 13ம் தேதி சென்றார். அங்கிருந்து சிங்கப்பூர் சென்ற அவர், அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

அவருக்கு, அந்நாட்டில் வழங்கப்பட்டிருந்த குறுகிய கால 'விசா' நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, கோத்தபய, சிங்கப்பூரில் இருந்து, மற்றொரு ஆசிய நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்குக்கு புறப்பட்டார்.


latest tamil news


முன்னதாக, அவரை தாய்லாந்தில் தங்க அனுமதிப்பது தொடர்பாக, இலங்கை அரசின் கருத்தை, அந்நாட்டு அரசு கேட்டது. இதற்கு, இலங்கை மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. தற்போதைய நிலையில், கோத்தபய தாய்லாந்தில் மூன்று மாதங்கள் வரை தங்க முடியும். அதற்குள், ஒரு நாட்டில் நிரந்தரமாக தங்குவதற்கான முயற்சியில் அவர் ஈடுபடுவார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, மருத்துவ காரணங்களுக்காக இலங்கை வந்த பிரிட்டனைச் சேர்ந்த கயிலே பிரேசர் என்ற பெண்ணை, உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி இலங்கை குடியேற்றத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இலங்கையில் நடந்த போராட்டங்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் இவர் கருத்து பதிவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
12-ஆக-202214:02:10 IST Report Abuse
Sampath Kumar தாய் மாசாஜ் செய்ய போயிருப்பாரு
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
12-ஆக-202213:51:40 IST Report Abuse
Vena Suna இவர் பெயரே சரி இல்லை.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
12-ஆக-202212:40:40 IST Report Abuse
Narayanan Koththapaye has resigned . Noe he is an ordinary person. His property is there in srilanga . Than he must come to the country .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X