விளையாட்டுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் தர வேண்டும்: 'தங்க மகன்' சரத் கமல்

Added : ஆக 12, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை : ''தமிழக அரசு விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்; விளையாட்டு மைதானங்கள் அதிகம் உருவாக்க வேண்டும்,'' என, காமன்வெலத் போட்டியில், டேபிள் டென்னிஸ் விளையாட்டில், தங்க பதக்கம் வென்ற சரத் கமல் தெரிவித்தார்.இவர், டேபிள் டென்னிஸ் போட்டியில், மூன்று தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்று உள்ளார்.தமிழகம் திரும்பிய அவருக்கு, குடும்பத்தினர், விளையாட்டு
Sharath Kamal, table tennis, sports, TN govt, Commonwealth Games

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : ''தமிழக அரசு விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்; விளையாட்டு மைதானங்கள் அதிகம் உருவாக்க வேண்டும்,'' என, காமன்வெலத் போட்டியில், டேபிள் டென்னிஸ் விளையாட்டில், தங்க பதக்கம் வென்ற சரத் கமல் தெரிவித்தார்.

இவர், டேபிள் டென்னிஸ் போட்டியில், மூன்று தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்று உள்ளார்.தமிழகம் திரும்பிய அவருக்கு, குடும்பத்தினர், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அதிகாரிகள், நண்பர்கள், சென்னை விமான நிலையத்தில், உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின், சரத்கமல் அளித்த பேட்டி: அரை இறுதிக்குப் பின் அதிக நம்பிக்கையுடனும், கடினமாகவும் விளையாடினேன். கடினமாக துவங்கிய போட்டி சிறப்பாக முடிந்தது. 2006ல் இரண்டு தங்கம் வென்றேன். இந்த முறை மூன்று தங்கம் வென்றுள்ளேன். இந்த போட்டி என் வாழ்க்கையில் சிறப்பான போட்டியாக அமைந்தது. தமிழக அரசு விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். விளையாட்டு மைதானங்களை அதிகமாக உருவாக்க வேண்டும்.


latest tamil news


வீரர்கள், வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி பெறுவது முக்கியம். சிறு வயது முதல் விளையாட்டை முதன்மையாக எடுக்க முடியாத நிலை தமிழகத்தில் உள்ளது.படிப்பு முக்கியமானதாக இருப்பதால், விளையாட்டில் மாணவர்கள் கவனம் செலுத்தமுடிவதில்லை. சிறு வயதில் என்னோடு இருந்தவர்கள், என்னை விட சிறப்பாக விளையாடக் கூடியவர்கள்.

அவர்கள் படிக்க சென்றதால், விளையாட்டை தொடர முடியவில்லை.வரக்கூடிய சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று, நாட்டுக்கு பதக்கங்களை வென்று தருவேன். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
12-ஆக-202214:01:20 IST Report Abuse
Vena Suna சாதனை அருமை. சீனா விளையாடவில்லை. அதுவும் அனுகூலம் ஆயிற்று என்றாலும்,பெரிய சாதனை.ப்ராஹ்மணர்களை இந்த அரசு வெறுத்தாலும்,அவர்கள் தான் பல பெருமைகளை சேர்க்கின்றனர்.
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
12-ஆக-202212:03:46 IST Report Abuse
Balaji நாங்க அரசாங்கத்தையே வெளயாட்டாதாம்ல நடத்தறோம்.. போவியா.. ஹி ஹி..
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
12-ஆக-202208:26:11 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN இப்படி தமிழக அரசின் கையாலாகாத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டினா அவனுக வாயிலர்ந்து சாக்கடை கொட்டும் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X