'ஜெய்பீம்' பட விவகாரம்: சூர்யா மீதான வழக்கு ரத்து

Added : ஆக 12, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை : ருத்ர வன்னியர் சேனா என்ற அமைப்பின் நிறுவனர் சந்தோஷ், சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், தாக்கல் செய்த வழக்கில், 'ஜெய்பீம்' திரைப்படத்தில், வன்னிய சமூகத்தினரை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதனால், படத் தயாரிப்பாளர் ஜோதிகா, நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த
Jai Bhim, Suriya

சென்னை : ருத்ர வன்னியர் சேனா என்ற அமைப்பின் நிறுவனர் சந்தோஷ், சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், தாக்கல் செய்த வழக்கில், 'ஜெய்பீம்' திரைப்படத்தில், வன்னிய சமூகத்தினரை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதனால், படத் தயாரிப்பாளர் ஜோதிகா, நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், புகாரை பதிவு செய்ய உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, வேளச்சேரி போலீசார் நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை கோரியும், உயர் நீதிமன்றத்தில், சூர்யா மற்றும் ஞானவேல் மனுத் தாக்கல் செய்தனர்.

மனுவில், 'வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்பே, சில காட்சிகள் நீக்கப்பட்டு விட்டன; குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டதாக கூறுவதற்கு ஆதாரங்கள் இல்லை' என கூறப்பட்டுள்ளது. மனுவை, நீதிபதி சதீஷ்குமார் விசாரித்தார். இருவருக்கு எதிராகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
12-ஆக-202212:38:32 IST Report Abuse
Sridhar செலவு எவ்வளவு?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
12-ஆக-202207:37:17 IST Report Abuse
duruvasar சூர்யா ஒரு புனிதன், ஞானவேல் ராஜா ஒரு அருளாளன். சந்துரு ஒரு சமத்துவவாதி. சமூக நீதி நிலைநாட்ட பட்டுவிட் டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X