சிறுநீர் கழித்த விவகாரம்: டாக்டர் மீதான வழக்கு ரத்து

Added : ஆக 12, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
சென்னை : மூதாட்டி வீட்டின் முன் சிறுநீர் கழித்தது தொடர்பான வழக்கில், ஏ.பி.வி.பி., அமைப்பின் முன்னாள் நிர்வாகி டாக்டர் சுப்பையா சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு முன்னாள் தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம். நங்கநல்லுாரில் வசித்து வரும் அவர், அகில பாரத
டாக்டர் சுப்பையா சண்முகம், சென்னை உயர் நீதிமன்றம் , Dr Subbiah Shanmugam, Chennai High Court,

சென்னை : மூதாட்டி வீட்டின் முன் சிறுநீர் கழித்தது தொடர்பான வழக்கில், ஏ.பி.வி.பி., அமைப்பின் முன்னாள் நிர்வாகி டாக்டர் சுப்பையா சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு முன்னாள் தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம். நங்கநல்லுாரில் வசித்து வரும் அவர், அகில பாரத வித்யார்த்தி பரிஷத் என்ற அமைப்பின் முன்னாள் நிர்வாகி.அவர் மீது, 2020 ஜூலையில் நங்கநல்லுார் அடுக்குமாடி குடியிருப்பில் 'பார்க்கிங்' பிரச்னை காரணமாக, தன் எதிர் வீட்டில் வசிக்கும் மூதாட்டியின் வீட்டு வாசல் முன், சுப்பையா சண்முகம் சிறுநீர் கழித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் வெளியானது.

இதையடுத்து, அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல் உட்பட, 3 பிரிவுகளின் கீழ், ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில், மார்ச்சில் அவர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர் சுப்பையா சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, 'இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டு விட்டதால், வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என, மனுதாரரான சுப்பையா சண்முகம் தரப்பில் வாதிடப்பட்டது.இதை ஏற்ற நீதிபதி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
17-ஆக-202208:15:26 IST Report Abuse
N Annamalai என்ன படிப்பு என்ன பயன் ?
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
16-ஆக-202212:17:51 IST Report Abuse
Rasheel படித்த படிப்புக்கும் செய்த செயலுக்கும்?? மிக கேவலம். முறையில்லாத கல்வி வழக்கத்தில் உள்ளது.
Rate this:
Cancel
Mohan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஆக-202210:15:54 IST Report Abuse
Mohan THIS KIND OF IMMORAL ACTIVITIES WILL BE AN EXAMPLES FOR ALL OTHER CRIMINAL ACTIVITIES...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X