கொசஸ்தலை ஆற்று நீர்வரத்துக்கு முட்டுக்கட்டை: ஆந்திராவில் 2 அணைகள் கட்ட திட்டம்!

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
பள்ளிப்பட்டு: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, ஆந்திர மாநிலத்திற்கு உட்பட்ட பகுதியில் இரண்டு அணைகள் கட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதனால், பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரும் தண்ணீரின் அளவு வெகுவாக குறையும். இது குறித்து, தமிழக பொதுப்பணி துறையினர், நேற்று, ஆந்திர மாநில அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர்.திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை

பள்ளிப்பட்டு: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, ஆந்திர மாநிலத்திற்கு உட்பட்ட பகுதியில் இரண்டு அணைகள் கட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதனால், பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரும் தண்ணீரின் அளவு வெகுவாக குறையும். இது குறித்து, தமிழக பொதுப்பணி துறையினர், நேற்று, ஆந்திர மாநில அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர்.latest tamil news
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆற்றுக்கு, ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து, தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பள்ளிப்பட்டில் இருந்து, பூண்டி நோக்கி பாயும் கொசஸ்தலை ஆறு, புண்ணியம் அருகே, ஆந்திர மாநிலத்திற்குள் நுழைகிறது.நகரி தாலுகாவில், சத்திரவாடா, ஏகாம்பரகுப்பம், புதுப்பேட்டை, புக்கை அக்ரஹாரம் வழியாக பாய்ந்து, நல்லாட்டூர் அருகே மீண்டும் தமிழகத்திற்குள் நுழைகிறது.

இந்நிலையில், பள்ளிப்பட்டுக்கு முன்னதாக, ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், கார்வேட் நகரம் தாலுகாவில், கத்ரேபள்ளி பகுதியில், 97 கோடி ரூபாய் மதிப்பில், 540 ஏக்கர் பரப்பில், புதிய அணை ஒன்று கட்டப்பட உள்ளது.

அதே போல், நகரி அடுத்த, புக்க அக்ரஹாரம் அருகே, 72 கோடி ரூபாய் மதிப்பில், 420 ஏக்கர் பரப்பில், மற்றொரு அணை கட்டப்பட உள்ளது.கொசஸ்தலையின் முன்னதாகவும், குறுக்காகவும், ஆந்திர மாநில பகுதியில், அம்மாநில அரசு, புதிய அணைகள் கட்ட உள்ளது. இதனால், கொசஸ்தலை ஆறு வாயிலாக தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறையும்.


latest tamil news

நிதிக்கு ஒப்புதல்


கிருஷ்ணாபுரம் அணையில் வழக்கமாக, 500 - 1,000 கன அடி நீர் மட்டுமே மழைக்காலத்தில் ஒரு சில நாட்கள் திறந்து விடப்படும்.இந்த சொற்ப நீரும், இரண்டு அணைகள் கட்டி தடுக்கப்படும் சூழலில், அவற்றை தாண்டி பூண்டிக்கு தண்ணீர் வந்து சேர்வது இனி, கானல் நீர் தான் என, தமிழக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருத்தணி கோட்ட பொதுப்பணித் துறை கோட்ட உதவி செயற்பொறியாளர் மகேஷ்பாபு மற்றும் சுந்தரம் ஆகியோர் நேற்று, நகரி கோட்ட பொதுப்பணித் துறை அலுவலர்களை சந்தித்து விபரம் கேட்டறிந்தனர்.

ஆந்திர மாநில பொதுப்பணித் துறையினர் கூறியதாவது:
கொசஸ்தலையில் புதிய அணைகள் கட்டுவது குறித்து, 10 ஆண்டுகளுக்கு முன், திட்ட வரைவு தயார் செய்யப்பட்டது.தற்போது அதற்கு அரசு, நிதி ஒதுக்கி ஒப்புதல் அளித்துள்ளது. திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்டு, முறையாக பணிகள் துவங்க மேலும் சில மாதங்கள் ஆகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
12-ஆக-202216:52:58 IST Report Abuse
தமிழ்வேள் திமுகவுக்கு லஞ்சம் கொடுத்தால் , அணைகள் என்ன , ஆளையே [டாஸ்மாக் தமிழனை ]கடத்தி காசு பார்க்கலாம் ......லஞ்சம் மட்டுமே முக்கியம் ..மாநிலம் எக்கேடுகெட்டு போனாலும் கவலை இல்லை ......
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
12-ஆக-202211:52:01 IST Report Abuse
JeevaKiran அவனுக்கு அவன் மக்கள் மீது அக்கறை உள்ளது. அதனால் அணை கட்டுகிறான். கட்டட்டும். இதேபோல் காவேரி குறுக்கே மேகதாது அணையையும் கட்டட்டும். கடந்த 15-20 நாட்களாக காவேரியில் 2 லட்சம் கண அடி நீர் வீணாக கடலில் கலக்கிறது. மேகதாது அணை இருந்திருந்தால் அவ்வளவு நீரும் சேமித்திருக்கமுடியும்.
Rate this:
Cancel
HONDA -  ( Posted via: Dinamalar Android App )
12-ஆக-202209:07:16 IST Report Abuse
HONDA இவங்க. பண்ற அநியாயம் தாங்முடியாம தான் ஆண்டவன் உலகத்தையே அழிக்கிறான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X