நாட்டின் சிறந்த முதல்வரில் ஸ்டாலின் 3ம் இடம்: கருத்துக் கணிப்பில் தகவல்

Added : ஆக 12, 2022 | கருத்துகள் (136) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவின் சிறந்த முதல்வர்களுக்கான கருத்துக்கணிப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 3ம் இடத்தை பிடித்தார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முதலிடத்தில் உள்ளார்.இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் என்ற கருத்துக்கணிப்பை ‛இந்தியா டுடே' பத்திரிகை நடத்தியது. இதில் தற்போது முதல்வர்களாக இருப்பவர்களில் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் 78 சதவீத ஆதரவுடன் முதலிடத்தை
Best ChiefMinister, Stalin, Naveen Patnaik, No 1 CM, Home State, Modi, First Choice, PM, சிறந்த முதல்வர், ஸ்டாலின், 3ம் இடம், நவீன் பட்நாயக், முதலிடம், பிரதமர், மோடி, ராகுல், கருத்துக்கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இந்தியாவின் சிறந்த முதல்வர்களுக்கான கருத்துக்கணிப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 3ம் இடத்தை பிடித்தார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முதலிடத்தில் உள்ளார்.

இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் என்ற கருத்துக்கணிப்பை ‛இந்தியா டுடே' பத்திரிகை நடத்தியது. இதில் தற்போது முதல்வர்களாக இருப்பவர்களில் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் 78 சதவீத ஆதரவுடன் முதலிடத்தை பிடித்தார். அதனைத் தொடர்ந்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா 63 சதவீதத்துடன் 2வது இடத்திலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் 61 சதவீதத்துடன் 3வது இடத்திலும் இருக்கின்றனர்.


latest tamil news


இதேபோல், தற்போது லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டால், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 286 இடங்கள் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 146 இடங்களிலும், மற்ற கட்சிகள் 111 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், லோக்சபா தேர்தல் தற்போது நடத்தப்பட்டால் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு, 53 சதவீதம் பேர் மோடி தான் பிரதமர் பதவிக்கு பொருத்தமாக இருப்பார் என தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு 9 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவளித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (136)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஆக-202217:17:13 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் கடைசியில் இருந்து மூன்றாவது இடமா ? ........ நல்லா பாருங்கப்பா ...... அல்லது திறமையற்ற முதல்வர்களில் மூன்றாவது இடமாக இருக்கும் ......
Rate this:
Cancel
ThiaguK - Madurai,இந்தியா
13-ஆக-202210:16:47 IST Report Abuse
ThiaguK கடைசிலேர்ந்து பார்த்தா நாங்க தான் நம்பர் ஒன்னு .......எப்ப்ப்பூடி
Rate this:
Cancel
13-ஆக-202206:42:22 IST Report Abuse
அப்புசாமி எதிர்கால பிரதமர் யோகியாருக்கு எத்தனாவது இடம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X