12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | |
Advertisement
வெள்ளி முதல் வியாழன் வரை (12.8.2022 - 18.8.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன், உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம்: சுக்கிரன் நன்மையை வழங்குவார். குல தெய்வத்தை மனதில் நினைத்து செயல்பட முயற்சிகள் வெற்றியாகும்.அசுவினி: வாரத்தின் முற்பகுதியில் நீங்கள் நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். அரசு வழியிலான எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
வாரராசி, ராசிபலன், வாரபலன், பரிகாரம், மேஷம், ரிஷிபம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், கன்னி,  விருச்சிகம்,  தனுசு, மகரம், கும்பம், மீனம்

வெள்ளி முதல் வியாழன் வரை (12.8.2022 - 18.8.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன், உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.



மேஷம்:


சுக்கிரன் நன்மையை வழங்குவார். குல தெய்வத்தை மனதில் நினைத்து செயல்பட முயற்சிகள் வெற்றியாகும்.



அசுவினி: வாரத்தின் முற்பகுதியில் நீங்கள் நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். அரசு வழியிலான எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஞாயிறு வரை பண நடமாட்டம் அதிகரிக்கும். திங்கள் செவ்வாயில் செலவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். புதன் வியாழனில் உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.



பரணி: நீண்ட நாள் முயற்சிகள் நிறைவேறும். எதிர்பாலினரின் ஆதரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் வந்தாலும் திங்கள் முதல் செலவுகள் அதிகரிக்கும். புதன் வியாழனில் முயற்சிகளில் குழப்பமும் தடுமாற்றமும் ஏற்படும்.



கார்த்திகை 1ம் பாதம்: வெள்ளி முதல் ஞாயிறு வரை உங்கள் முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். உங்கள் பணிக்கு பாராட்டுகள் கிடைக்கும். தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஒரு சிலர் ஈடுபடுவீர்கள். திங்கள் செவ்வாயில் செலவு அதிகரிக்கும். புதன் வியாழனில் குழப்பங்களுக்கு ஆளாவீர்கள்.



ரிஷபம்:


latest tamil news


சூரியன், சுக்கிரன், கேது, புதன் நன்மைகளை வழங்குவார்கள் சூரிய வழிபாடு சிறப்பை உண்டாக்கும்.



கார்த்திகை 2, 3, 4: நீங்கள் நினைத்ததை நிறைவேற்றி மகிழும் வாரம் இது, தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும் பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். புதன் வியாழனில் செலவுகள் அதிகரிக்கும்.



ரோகிணி: உங்கள் முயற்சிக்கேற்ற பலன்களை அடைவீர்கள். இதுவரை இருந்த பிரச்சினைகளை இல்லாமல் செய்வீர்கள். மற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் உங்களுடைய செல்வாக்கு உயரும். வார இறுதியில் செலவுகள் அதிகரிக்கும்.



மிருகசீரிடம் 1, 2: உங்களுடைய சங்கடங்கள் இந்த வாரம் இல்லாமல் போகும். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் மறைவார்கள், பிள்ளைகளுக்காக மேற்கொண்ட முயற்சிகள் நிறைவேறும். நண்பர்களின் ஆதரவுடன் நினைத்ததை சாதிப்பீர்கள்.



மிதுனம்:


சுக்கிரன், ராகு நன்மைகளை வழங்குவார்கள். பெருமாளை வழிபடுங்கள்.



மிருகசீரிடம் 3, 4: வெள்ளிக்கிழமை மாலை வரை நெருக்கடிகள் இருக்கும். அதன்பின் பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். சனிக்கிழமை முதல் உங்கள் செயல்கள் ஆதாயமாகும். முயற்சிகள் நிறைவேறும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.



திருவாதிரை: வெள்ளிக்கிழமை மாலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்கள் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். அதன்பின் உங்கள் அனுகுமுறையால் நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். முயற்சிகளின் வழியே எதிர்பார்த்தவற்றை அடைவீர்கள்.



புனர்பூசம் 1, 2, 3: செயல்களில் எச்சரிக்கையும் கவனமும் தேவைப்படும். விரய செவ்வாய் உங்களை சங்கடத்திற்கு ஆளாக்குவார். வெள்ளிக்கிழமை மாலை முதல் சந்திர பலத்தால் உங்கள் மனம் தெளிவடையும். சிந்தித்து செயல்பட்டு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.


சந்திராஷ்டமம்:

10.8.2022 மதியம் 2:15 மணி - 12.8.2022 மாலை 4:55 மணி



கடகம்:


சுக்கிரன், செவ்வாய், புதன் நன்மைகளை வழங்குவார்கள். முருகனை வழிபடுங்கள்.



புனர்பூசம் 4: வெள்ளிக்கிழமை மாலை வரை உங்கள் முயற்சிகள் சாதகமாகும். சனி, ஞாயிறுகளில் நெருக்கடிகளும் அதனால் குழப்பமும் அதிகரிக்கும். திங்கள் கிழமை முதல் உங்கள் செயல்கள் வெற்றியாகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும்.



பூசம்: வெள்ளி மாலை வரை உங்கள் எண்ணம் ஈடேறும் சனி ஞாயிறுகளில் சங்கடங்கள் அதிகரிக்கும். முயற்சிகள் இழுபறியாகும். திங்கள் முதல் உங்கள் செயல்கள் வெற்றியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.



ஆயில்யம்: உங்கள் முயற்சிகளால் தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். சனி, ஞாயிறு களில் சந்திராஷ்டமம் என்பதால் அவசர முடிவுகள் எதுவும் வேண்டாம். மற்றவர்களை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்காதீர்கள். திங்கள் முதல் உங்கள் செயல்களில் ஆதாயம் உண்டாகும்.


சந்திராஷ்டமம்:

12.8.2022 மாலை 4:56 மணி - 14.8.2022 இரவு 8:46 மணி



சிம்மம்:


latest tamil news


சுக்கிரன், கேது உங்களுக்கு நன்மையை வழங்குவார்கள். விநாயகரை வழிபடுங்கள்.



மகம்: ஞாயிறு வரை உங்களுடைய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். வரவுகள் வந்து சேர்ந்து மகிழ்ச்சியான நிலையில் இருப்பீர்கள். அரசு வழி செயல்கள் வெற்றியாகும். திங்கள் செவ்வாய்க் கிழமைகளில் எல்லாவற்றிலும் கவனமும் எச்சரிக்கையும் தேவைப்படும். புதன் வியாழனில் நன்மைகள் அதிகரிக்கும்.



பூரம்: உங்கள் ராசியாதிபதி விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகளில் கவனம் தேவை. என்றாலும், வெள்ளி முதல் ஞாயிறு வரை சந்திரன் உங்களுக்கு நன்மைகளை வழங்குவார். திங்கள் செவ்வாய்க்கிழமைகளில் சந்திராஷ்டமம் என்பதால் யோசித்து செயல்படுங்கள். அதன்பின் நன்மைகள் தோன்றும்.



உத்திரம் 1: ஞாயிறு வரை தைரியமாக செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். திங்கள் செவ்வாய்க்கிழமைகளில் சிந்தித்து செயல்படுவதும். நிதானத்தைக் கடை பிடிப்பதும் நன்மையை உண்டாக்கும். புதன் வியாழன் நன்மையாகும்.


சந்திராஷ்டமம்:

14.8.2022 இரவு 8:47 மணி - 16.8.2022 நள்ளிரவு 2:32 மணி




கன்னி:


சுக்கிரன், சூரியன் நன்மைகளை வழங்குவார்கள். துர்க்கையை வழிபடுங்கள்.



உத்திரம் 2, 3, 4: வெள்ளி முதல் செவ்வாய் வரை உங்கள் முயற்சிகளில் நன்மை உண்டாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நினைத்ததை சாதித்து வேண்டியதை அடைவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்புண்டாகும். புதன் வியாழனில் சந்திராஷ்டமம் என்பதால் சிந்தித்து செயல்படுங்கள்.



அஸ்தம்: இந்த வாரம் உங்களுக்கு யோகமான வாரமாகும். வெள்ளிக்கிழமை சுமாராக சென்றாலும் அதன் பிறகு உங்கள் செயல்களில் வெற்றிதான். அரசு வழியிலும் நன்மைகள் ஏற்படும். புதன் வியாழனில் சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் கவனம் தேவை.



சித்திரை 1, 2: சூரிய பலத்தால் உங்களுடைய செயல்கள் நிறைவேறும் வாரம். சனிக்கிழமை முதல் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். மற்றவர்கள் மதிப்பிற்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதன் வியாழனில் பணிகளில் கவனம் தேவை.


சந்திராஷ்டமம்:

16.8.2022 நள்ளிரவு 2:33 மணி - 19.8.2022 காலை 10:51 மணி



துலாம்:


புதன் மகிழ்சியை வழங்குவார். வராகியை வழிபடுங்கள்.



சித்திரை 3, 4: ஞாயிறு வரை உங்கள் முயற்சிக்கேற்ற நன்மைகளை அடைவீர்கள். ஒரு சில செயல்கள் இழுபறியாகும். திங்கள் கிழமை முதல் துணிவுடன் செயல்படுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். பொருளாதார நிலை உயரும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள்.



சுவாதி: ஞாயிறு வரை அன்பு, பாசம், காதல் என்றவற்றில் சிக்குவீர்கள். அதனால் உங்களுடைய கவனம் சிதறும். திங்கள் கிழமை முதல் பெரியவர்களின் ஆலோசனைப்படி உங்களை மாற்றிக்கொண்டு எதிர்கால வாழ்க்கையை நினைத்து செயல்படுவீர்கள்.



விசாகம் 1, 2, 3: வாரத்தின் முதல் மூன்று நாட்களும் உங்களுடைய முயற்சிகள் இழுபறியாகவே இருக்கும். எண்ணங்கள் நிறைவேறாமல் போகும். திங்கள் முதல் துணிச்சலுடன் செயல்பட ஆரம்பிப்பீர்கள். உங்களுடைய முயற்சிகள் பலிதமாகும்.



விருச்சிகம்:


ராகு, சுக்கிரன், புதன் நன்மைகளை வழங்குவார்கள். சிவனை வழிபடுங்கள்.



விசாகம் 4: வெள்ளிக்கிழமை உங்கள் முயற்சிகள் பலிதமாகும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். அதன்பின் எதிர்பாலினரால் உங்கள் கவனம் சிதறும் என்றாலும் எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். வியாபாரத்தில் கவனம் செல்லும்.



அனுஷம்: எதிர்ப்புகள் விலகும். உங்கள் செயல்களில் எளிதாக வெற்றி பெறுவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். சனிக்கிழமை முதல் பண வரவும் ஆதாயங்களும் மகிழ்ச்சியும் உண்டாகும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும்.



கேட்டை: பெரும்பாலான கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்கள் செயல்களில் லாபம் காண்பீர்கள். எதிரிகள் விலகிச் செல்வார்கள். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சினைகள் முடிவிற்கு வரும். உங்களுடைய தேவைகள் நிறைவேறும்.



தனுசு:


செவ்வாய், சுக்கிரன், கேது நன்மைகளை வழங்குவார்கள். சனீஸ்வரரை வழிபடுங்கள்.



மூலம்: வெள்ளி முதல் ஞாயிறு வரை வேகமுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். திங்கள் செவ்வாயில் சிலவற்றில் அலட்சியம் காட்டுவீர்கள் என்பதால் செயல்கள் இழுபறியாகும். புதன் வியாழனில் உங்கள் செயல்கள் நிறைவேறி எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.



பூராடம்: செவ்வாயும் கேதுவும் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார்கள். யோசிக்காமல் செய்யும் செயல்களும் லாபத்தை உண்டாக்கும். ஞாயிறு வரை உங்களுடைய பெரிய முயற்சிகள் வெற்றியாகும். அதன்பிறகு ஒவ்வொரு செயலையும் யோசித்து செய்ய வேண்டிய நிலை உண்டாகும்.



உத்திராடம் 1: வாழ்க்கைத் துணை வழியே ஆதாயம் காண்பீர்கள். வெள்ளி முதல் ஞாயிறு வரை மகிழ்ச்சியாக செல்லும், திங்கள் முதல் திட்டமிட்டு செயல்பட்டு எண்ணியதை அடைவீர்கள். அரசுப் பணியாளர்கள் எதிர்பார்த்த நன்மைகளை அடைய முடியாமல் போகும். ஒரு சிலர் மாறுதலில் செல்ல வேண்டியதாக இருக்கும்.



மகரம்:


புதன் நன்மையை வழங்குவார். பைரவரை வழிபடுங்கள்.



உத்திராடம் 2, 3, 4: வெள்ளிக்கிழமை மாலை வரை உங்கள் மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடந்தேறும். சனி, ஞாயிறுகளில் குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திங்கள் செவ்வாயில் செயல்களில் லாபம் காண்பீர்கள். புதன் வியாழனில் போராடி வெல்வீர்கள்.



திருவோணம்: துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவதால் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்களுடைய சொல்லுக்கு மதிப்பளிப்பார்கள். அந்நியர்களால் ஆதாயம் காண்பீர்கள்.



அவிட்டம் 1, 2: வெள்ளி முதல் செவ்வாய் வரை உங்களுடைய விருப்பங்கள் எளிதாக நிறைவேறும். மூன்றாமிட குரு வக்கிரமடைந்துள்ளதால் அவரால் உண்டான பாதிப்புகள் இல்லாமல் நீங்கும். உங்கள் எண்ணமும் செயலும் ஒன்றாகும். புதன் வியாழனில் செயல்களில் அக்கறை தேவை.



கும்பம்:


ராகு, சூரியன் யோகத்தை வழங்குவார்கள்.மகாலட்சுமியை வழிபடுங்கள்.



அவிட்டம் 3, 4: வெள்ளிக்கிழமை மாலை வரை அலைச்சலும் செலவுகளும் இருக்கும். சனி ஞாயிறில் உங்கள் மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடைபெறும். திங்கள் செவ்வாயில் குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும். புதன் வியாழனில் துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள்.



சதயம்: தொழிலில் இருந்த தடைகள் விலகும். பண வரவு தாராளமாகும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு அதிகரிக்கும். பணியிடத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.உங்களுடைய சுய முயற்சிகளால் உங்கள் நிலையில் மாற்றம் காண்பீர்கள்.



பூரட்டாதி 1, 2, 3: வெள்ளிக்கிழமை செலவுகள் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான நவீன பொருட்களை வாங்குவீர்கள். சனி ஞாயிறில் உங்கள் எண்ணம் ஈடேறும். எதிர்காலம் குறித்த உங்களுடைய முயற்சிகள் திங்கள் கிழமைக்கு மேல் நிறைவேறும்.



மீனம்:


செவ்வாய், சுக்கிரன், புதன் யோகத்தை வழங்குவார்கள். மாரியம்மனை வழிபடுங்கள்.



பூரட்டாதி 4: வெள்ளிக்கிழமை மாலை வரை எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். சனி,ஞாயிறுகளில் திடீர் செலவுகளால் நெருக்கடிகளை சந்திப்பீர்கள் அதன்பின் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறி மகிழ்வீர்கள். ஒரு சிலர் வசிக்கும் இடத்தை மாற்றுவீர்கள்.



உத்திரட்டாதி: ராசி நாதன் வக்கிரம் அடைந்திருப்பதால் குடும்பத்தினருடன் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வெள்ளிக்கிழமை வரவுகள் அதிகரிக்கும். சனி ஞாயிறில் பிள்ளைகளின் திருமணம், புதிய வீடு கட்டுதல் என்று உங்கள் சிந்தனை செல்லும். திங்கள் கிழமை முதல் உங்கள் முயற்சிகள் நிறைவேறும்.



ரேவதி: உறவு, நட்புகளிடம் ஏற்பட்ட பிரச்னைகளைக் கண்டறிந்து அவற்றை சரி செய்வீர்கள். வெள்ளிக்கிழமை எதிர்பார்த்தவற்றில் வரவுகள் உண்டாகும். சனி ஞாயிறில் செலவுகளும் அலைச்சலும் அதிகரிக்கும். அதன்பின் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X