சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்குரு வழங்கும் டிப்ஸ்

Added : ஆக 12, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சத்குரு: நோய் எதிர்ப்பு சக்தி என்பது நீங்கள் ஒரே நாளில் வளர்த்து விடக்கூடிய ஒன்று இல்லை. பொதுவாக, இதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம், மருத்துவரீதியாகவும் இதைப் பற்றி நீங்கள் ஆய்வும் செய்யலாம். என்னளவில், நான் இப்படித்தான் பார்க்கிறேன், நம்புகிறேன். பல்வேறு காரணங்களை, மக்களின் வாழ்க்கை முறைகளை பார்க்கும்போது, உணவு வழக்கங்களை பார்க்கும்போது, உலகத்தில் இருக்கும்
சத்குரு ஜக்கி வாசுதேவ், நோய் எதிர்ப்பு சக்தி, ஈஷா க்ரியா, Satguru Jaggi Vasudev, Isha Kriya,

சத்குரு: நோய் எதிர்ப்பு சக்தி என்பது நீங்கள் ஒரே நாளில் வளர்த்து விடக்கூடிய ஒன்று இல்லை. பொதுவாக, இதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம், மருத்துவரீதியாகவும் இதைப் பற்றி நீங்கள் ஆய்வும் செய்யலாம். என்னளவில், நான் இப்படித்தான் பார்க்கிறேன், நம்புகிறேன். பல்வேறு காரணங்களை, மக்களின் வாழ்க்கை முறைகளை பார்க்கும்போது, உணவு வழக்கங்களை பார்க்கும்போது, உலகத்தில் இருக்கும் பெரும்பாலான மக்களுடன் ஒப்பிடும்போது, தென்னிந்தியர்கள் மற்ற யாரை விடவும் இன்னும் சிறப்பான நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்கிறார்கள்!

உணவு பழக்க வழக்கங்களாலும், பயிற்சிகளாலும், தட்பவெப்ப சூழ்நிலையாலும், வேறு பல அம்சங்களாலும், இயற்கையாகவே இப்படி இருக்கிறார்கள். நீங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும், இப்படிப்பட்ட ஒரு வெப்ப மண்டல பகுதியில், இந்த மண்ணில்தான் மற்ற எந்த இடங்களை விடவும் அதிகளவில் உயிர் வடிவங்கள் வாழ்கிறது. நுண்ணுயிர்கள் உட்பட, இங்கே வாழும் உயிர்களுடைய எண்ணிக்கையும் வகைகளும் மிகமிக அதிகம். அதனால், இந்த நிலத்தில் வாழ்வதாலேயே இந்த உடலமைப்பு இன்னும் உறுதியாகிறது. ஏனெனில், உயிர் வடிவங்கள் எல்லாவற்றிற்கும் நாம் எப்போதும் வெளிப்படுத்தப்படுகிறோம். இது ஒரு அம்சம். அடுத்தது உணவு, இன்னொரு விஷயம் வாழ்க்கை முறை. இந்த எல்லா அம்சங்களும் இங்கே சேர்ந்து இருக்கிறது.


விவசாய சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி


நாம் பெரும்பாலும் விவசாய சமுதாயங்களாக இருப்பதனால், இந்த தலைமுறையை அப்படி சொல்லிவிட முடியாது என்றாலும், முந்தைய தலைமுறை வரையிலும் நாம் அனைவருமே விவசாய சமுதாயங்களாகவே இருந்து வந்தோம். அதனால் மக்கள் நிலத்திலேயே வாழ்ந்தார்கள். அதுதான் அவர்களுக்கு அபாரமான உறுதியை கொடுத்தது. ஆனால் வெளியே, உலகத்தின் பெரும்பாலான பகுதிகளில், மக்கள்தொகையில் சுமார் 80 சதவிகிதத்தினர் தோராயமாக 100 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயத்தில் இருந்து விலகியிருக்கலாம்.

இந்தியாவை பொறுத்தவரையில், நாம் நிலத்தை விட்டு விலகியிருக்கத் துவங்கி 25, 30 ஆண்டுகள்தான் ஆகிறது. மண்ணோடு நேரடி தொடர்பில் நம் மக்கள் வாழ்ந்ததனுடைய பலன் இன்னும் நம்மிடம் தொடர்கிறது. இது இப்படியே தொடர்ந்து நமக்கு இருக்காது. எல்லோருமே உயரமான அடுக்குமாடி கட்டிடங்களில் தொடர்ந்து வாழத் துவங்கினால், நிலத்துடன் நேரடி தொடர்பில் இல்லாமல், ஆய்வுக்கூட எலிகளைப் போல எல்லாவற்றில் இருந்தும் பாதுகாக்கப்பட்டு வாழ்ந்தால், நமது நோய் எதிர்ப்பு சக்தியும் கீழே போகும். ஆனால், நமக்கு இதுவரையிலும் எல்லாமே சாதகமாகவே இருந்துவருகிறது என்றே நான் நினைக்கிறேன்.


நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க


சத்குரு, இப்போது என்னுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நான் என்ன செய்ய முடியும் என்பது தானே உங்கள் இப்போதைய தவிப்பு? நம் மண்ணின் மகத்துவத்தை நாமே அறியாமல் இருந்தால், நம் வாழ்க்கை முறையாகவே கலந்துவிட்ட நம் கலாச்சாரத்தின் பெருமைகளை நாம் எப்படி மதிப்போம், கொண்டாடுவோம்?
நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல ஒரே நாளில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு இயற்கையான தீர்வு கிடைத்துவிடாது. ஆனால், காலப்போக்கில் இதன் பலன்களை நீங்கள் அனுபவிக்க முடியும். பொதுவான, எளிதாக கிடைக்கும் விஷயங்களைப் பற்றி நாம் பார்ப்போம்.


வேப்பிலை & மஞ்சளின் மகிமை


வேப்பிலை - இது கிட்டத்தட்ட நம் தேசம் முழுவதுமே மலைப்பகுதிகள் தவிர மற்ற எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. தினசரி சிறிதளவு (5 அல்லது 6) வேப்பிலைகளை உட்கொள்ளலாம்.
மஞ்சள் - இது எப்படியும் எல்லா இடத்திலும் எளிதாக கிடைக்கும் ஒன்று. இப்போது நேனோ டர்மரிக் என்று ஒன்றை உற்பத்தி செய்கிறார்கள். இதை உடல் உள்ளே எடுத்துக்கொள்ளும் சதவிகிதமானது சாதாரண மஞ்சளை விட மிக அதிகம் என்கிறார்கள். தினமும் ஒரு கொண்டைக் கடலை அளவுக்கு மஞ்சளை உருண்டை செய்து வெதுவெதுப்பான நீருடன் எடுத்துக்கொள்ளலாம். இதுவும் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை பெரிய விதத்தில் மேம்படுத்தும்.
மலை நெல்லிக்காய் - இதை சிறு துண்டுகளாக நறுக்கி இரவு முழுவதும் இடித்த குறுமிளகு அல்லது பச்சை மிளகுடன் சேர்த்து தேனில் ஊற வைக்க வேண்டும். இதை மூன்று வேளையும் ஒவ்வொரு ஸ்பூன் அளவு சாப்பிடலாம்.

இதுபோன்ற எல்லாமே உங்கள் உடலில் எப்போது சிறப்பாக வேலை செய்யும் என்றால், நீங்கள் வெறும் வயிராக இருந்து, முதல் உணவாக இவற்றை எடுத்துக் கொள்ளும்போதுதான்.
இவை எல்லாவற்றையும் நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நீங்களே பார்க்கலாம். 4ல் இருந்து 8 வாரத்தில் ஒருவருடைய நோய் எதிர்ப்பு சக்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பார்க்க முடியும்.


துணை நிற்கும் யோகா


உங்களுடைய நுரையீரல் திறனை அதிகரிக்க 'சிம்ம க்ரியா' என்ற எளிமையான யோகா பயிற்சியை செய்யலாம். இதை https://www.youtube.com/watch?v=YCdTBT4Z8Gk&t=2s இந்த வீடியோவை பார்த்து வீட்டில் இருந்த படியே கற்றுக்கொள்ளலாம். மேலும், Sadhguru app ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து மனதை அமைதியாகவும், சமநிலையுடனும் வைத்து கொள்ள 'ஈஷா க்ரியா' போன்ற யோக பயிற்சிகளை இலவசமாக கற்றுக்கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
16-ஆக-202208:06:25 IST Report Abuse
Matt P மஞ்சளின் மகிமையை தெரிந்து மஞ்சளை எப்படி உபயோக்கிலாம் என்றால் இவர்கள் வெதுவெதுப்பான நீரிலோ, பாலிலோ கலந்து எடுக்கிறார்கள். ஆனால் நமக்கு தினமும் குழம்பு வைக்கும்போது , மஞ்சளை கலந்தால் போதுமானதாகவே இருக்கும் .
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
14-ஆக-202215:52:40 IST Report Abuse
Sampath Kumar இது எல்லாம் .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X