கோவை சூலூரில் இறங்கிய பிரான்ஸ் ரபேல் போர் விமானங்கள்

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி: முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தோ பசிபிக் பகுதியில் ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக 16 ஆயிரம் கி.மீ., தூரம் பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் வான் மற்றும் விண்வெளி பாதுகாப்பு அணி, ரபேல் போர் விமானங்களுடன் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமான படை தளத்தில் கடந்த 10ம் தேதி இறங்கியது. பிரான்ஸ் விமானப்படையின் இந்த பயிற்சி ஆக.,1 0 முதல் செப்.,18 வரை நடைபெற உள்ளது.10ம் தேதி
France, Rafale, Fighters, Stopover, India,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தோ பசிபிக் பகுதியில் ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக 16 ஆயிரம் கி.மீ., தூரம் பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் வான் மற்றும் விண்வெளி பாதுகாப்பு அணி, ரபேல் போர் விமானங்களுடன் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமான படை தளத்தில் கடந்த 10ம் தேதி இறங்கியது. பிரான்ஸ் விமானப்படையின் இந்த பயிற்சி ஆக.,1 0 முதல் செப்.,18 வரை நடைபெற உள்ளது.

10ம் தேதி களமிறங்கிய ரபேல் போர் விமானங்கள் மறு நாள் (ஆக.,11) அதிகாலை, எரிபொருள் நிரப்பிய பின்னர், பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள பிரான்ஸ் கட்டுப்பாட்டில் அமைந்திருக்கும் நியு கலேடெனியா தீவு பகுதிக்கு கிளம்பி சென்றது.


latest tamil news



இது தொடர்பாக டில்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகம் வெளியிட்ட அறிக்கை: பிரான்சில் இருந்து பசிபிக் வரையிலான நீண்ட தூர பயணத்தின் இடையே, தொழில்நுட்ப பரிசோதனைக்காக 10 முதல் 11 வரையில் சூலூர் விமான படை தளத்தில் ரபேல் போர் விமானங்களுடன் பிரான்ஸ் அணி தரையிறங்கியது.
இந்த பயணத்தின் முதல் கட்டத்தில், பிரான்சில் இருந்து நியூகலெடெனியாவிற்கு 72 மணி நேரத்தில், விமான படை குழுவை அனுப்பி, பிரான்ஸ் விமானப்படையின் சக்தியை எடுத்து காட்டுவதே நோக்கமாகும்.இதனை நிறைவேற்ற, ஆசியாவின் எங்களின் முதன்மையான கூட்டாளியான இந்தியாவை நம்பியிருப்பது இயற்கையானது. பிரான்ஸ் அணியினரை வரவேற்ற இந்திய விமானப்படைக்கு எங்களது நன்றி எனக்கூறப்பட்டுள்ளது.


latest tamil news


பிரான்சின் இந்த நடவடிக்கை, இரு நாடுகளின் விமானப்படைகளுக்கு இடையேயான பரஸ்பர நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. ரபேல் போர் விமானங்கள் இரு படைகளிலும் உள்ளது, நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே, ராணுவ தளவாடம் உதவி தொடர்பான ஒப்பந்தம் கடந்த 2018 ல் கையெழுத்தாகி உள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், தெற்கு கொரியா, ஜப்பான் , ஆஸ்திரேலியாவுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
12-ஆக-202216:33:40 IST Report Abuse
ANANDAKANNAN K நல்ல முன்னேற்றம், பிரான்ஸ் நமக்கு தொழில் நுட்ப ரீதியாக உதவுகிறது, தயவு செய்து ராணுவம் சம்பந்தம் உள்ள எந்த நிகழ்வாக இருந்தாலும் அதை முழு மனதுடன் ஏற்க வேண்டும், திரு.மோடி அவர்களை விமர்ச்சனம் செய்கிறோம் என்ற பெயரில் விச கருத்துக்களை இங்கு உமிழ வேண்டாம் அது நம் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளையும் செய்தியாகும்.இது ஒன்றும் அரசியல் நிகழ்வு அல்ல, இரு நாட்டிற்கும் இடையில் நடக்கும் பாதுகாப்பு பரிபாலனம்.நாட்டை உங்களுக்கு பிடிக்காதவர்கள் ஆட்சி செய்தால் அவர்களின் செயல்பாடுகளை நாகரிகமாக தான் கருத்தாக சொல்ல வேண்டும் அதைவிடுத்து தவறான வார்த்தை பிரயோகம் செய்ய கூடாது.ஏன் என்றால் இந்திய நாட்டில் பெருமான்பையான மக்கள் வாக்களித்து தான் திரு.மோடி அவர்களும் பிஜேபி கட்சியும் நாடாளுகின்றது, இங்கும் தான் திமுக நூறு சதவீதம் வெற்றி பெறவில்லை அதற்காக அவரை முதல்வராக ஏற்க முடியாத அது எப்படி, யார் ஏற்றாலும் ஏற்கவிட்டாலும் திரு.ஸ்டாலின் தான் முதல்வர், திரு.மோடி தான் இந்திய நாட்டின் பிரதமர், கால சக்ரம் சுழலும் அப்பறம் யார் ஆசை நிறைவேறுகிறது என்று பார்ப்போம், இன்னும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திரு.மோடி தான் வெற்றி பெறுவார், அவர் தான் வருங்கால இந்திய பிரதமர், எல்லறோம் ஞாபகம் வையுங்கள் திரு.மோடி ஒன்றும் தமிழ்நாட்டு மக்கள் ஓட்டு போட்டு வெற்றிபெற வில்லை.இந்த திராவிட கட்சிகளை நீங்கள் எப்போ தேர்தலில் தோல்வியடைய செய்கிறோர்களோ அன்று தான் ஊழல் பிரிவினைவாதம் மதத்தை வைத்து அரசியல் மொழியை வைத்து அரசியல் இது எல்லாம் அகலும், ஒரு நாள் முன்பு திமுக வார்டு கவுன்சிலர் ஒரு பெண் உறுப்பினர் கணவர் நடு ரோட்ல பட்டகத்தியுடன் பொது மக்களை விரட்டி விரட்டி வெட்ட ஓடுகிறார் பாருங்கள் அதை தமிழ்நாடு முழுவதும் மக்கள் பார்க்கணும் பிறகு நமக்கும் நடக்கும் மக்களே.
Rate this:
Cancel
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
12-ஆக-202214:32:32 IST Report Abuse
Ramaraj P சீலிட்ட கவர் காங்கிரஸிடம் உள்ளது சீனா கொடுத்தது.
Rate this:
Cancel
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
12-ஆக-202214:22:24 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam சீன கப்பல் விருப்பமின்மையய் தாண்டி இலங்க்கைக்கு பயணிக்கிறதே அதனி கண்கானிக்க மற்றூம் எச்சரிக்கைக்காக இருக்குமோ என்னமோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X