அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி தேரோட்டம் கோலாகலம்

Added : ஆக 12, 2022 | |
Advertisement
மதுரை: அழகர் கோவில் கள்ளழகர் கோயிலில் இன்று உச்ச நிகழ்வான ஆடி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மதுரை அழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழா ஆக.,3ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாளான இன்று, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, பெருமாள் அதிகாலை 4.15 மணிக்கு மேல் 4.35 மணிக்குள் சுவாமி
அழகர்கோவில் தேரோட்டம், கள்ளழகர் கோயில், ஆடி தேரோட்டம் , Alaghar kovil therottam, Kallaghar kovil, Aadi therottam,

மதுரை: அழகர் கோவில் கள்ளழகர் கோயிலில் இன்று உச்ச நிகழ்வான ஆடி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மதுரை அழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழா ஆக.,3ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாளான இன்று, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, பெருமாள் அதிகாலை 4.15 மணிக்கு மேல் 4.35 மணிக்குள் சுவாமி தேவியர்களுடன் தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். நாளை 13ம் தேதி மாலையில் புஷ்ப சப்பரம், 14ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை பணியாளர்கள் செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X