ஆர்டர்லி முறை தொடர்வது வெட்கக்கேடானது: சென்னை உயர்நீதிமன்றம்

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
சென்னை: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கடந்து விட்ட பிறகும் ஆர்டர்லி முறை பின்பற்றுவது வெட்கக்கேடானது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.போலீஸ் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறியதாவது: சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், தற்போதும் ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் இருந்த ஆர்டர்லி முறையை பின்பற்றுவது
ஆர்டர்லி, போலீஸ், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை ஐகோர்ட், உயர்நீதிமன்றம், ஐகோர்ட், வெட்கக்கேடு, நீதிபதி, எஸ்.எம்.சுப்ரமணியம், ஆர்டர்லி முறை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கடந்து விட்ட பிறகும் ஆர்டர்லி முறை பின்பற்றுவது வெட்கக்கேடானது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

போலீஸ் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறியதாவது: சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், தற்போதும் ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் இருந்த ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடாக இருக்கிறது. ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரு வார்த்தை போதும். ஆனால், அரசிடம் இருந்தோ, டிஜிபி.,யிடமிருந்தோ அது வருவதில்லை. ஆர்டர்லி முறையை பயன்படுத்தும் போலீஸ் உயர் அதிகாரிகளை கேள்வி கேட்கும் உரிமை பொது மக்களுக்கு உண்டு.


latest tamil news



ஆர்டர்லி விவகாரத்தில் முதல்வரின் எச்சரிக்கை மட்டும் போதாது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமான வழக்கில் உள்துறை தலைமை செயலாளர் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை முறையாக வேண்டும். கண்காணிக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
இதனை செயல்படுத்தாத எஸ்.பி.,க்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடப்படும். ஆர்டர்லி முறையை ஒழிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
13-ஆக-202202:25:27 IST Report Abuse
BASKAR TETCHANA முதல்வர் நல்ல காட்டமான அறிக்கையை தான் வெளியிட்டார். அதை செயல் படுத்த வேண்டியவர் யார். டி.ஜி..பி தான். அவரே ஸ்டாலின் வீட்டில் ஆர்டெர்ளியாக தான் இருக்கிறார். அதை விட்டு அவரால் வெளிவர முடியவில்லை. தினமும் கோடி போட்ட காரில் போவது எப்படி . அவரை தூக்கினாள் எல்லா போலீசாருக்கும் விடுதலை. கிடைத்த மாதிரி. சும்மா ஸ்டாலின் பின்னாடியே சுற்றி கொண்டு இருந்தால் எப்படி. நீதிபதி சொன்னது போல் உள்துறை அமைச்சகத்துக்கு சொல்லி மாற்றம் செய்யுங்கள். இந்த டி.ஜி.பி ஒரு பந்தா பேர்வழி.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
12-ஆக-202220:32:46 IST Report Abuse
Ramesh Sargam ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இருந்த ஆர்டர்லி முறையை இன்றும் பின்பற்றுவது சரியல்ல. உடனே அந்த முறையை தமிழக அரசு கைவிடவேண்டும். எடுக்க தவறினால், நீதிமன்றம் தலையிட்டு கடுமையான உத்தரவு பிறப்பிக்கவேண்டும். உத்தரவை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்.
Rate this:
Cancel
12-ஆக-202217:15:26 IST Report Abuse
மதுமிதா இனி அவர்களும் சுதந்திர காற்றை சுவாசிப்பார்கள் நீதிபதி அவர்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X