பேபி பவுடர் விற்பனையை நிறுத்தும் ஜான்சன் - ஜான்சன்

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
உலகம் முழுவதும் அடுத்தாண்டு முதல் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்த இருப்பதாக ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது.அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான டால்கம் பவுடரை 1894ம் ஆண்டு முதல் சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், டால்கம் பவுடரில் பயன்படுத்தப்படும் ஆஸ்பெடாஸ் காரணமாக
டால்கம் பவுடர், ஜான்சன் அண்டு ஜான்சன், Talcum Powder, Johnson & Johnson, stop, Sales, Globally, Cancer, புற்றுநோய் அபாயம்


உலகம் முழுவதும் அடுத்தாண்டு முதல் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்த இருப்பதாக ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது.


அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான டால்கம் பவுடரை 1894ம் ஆண்டு முதல் சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், டால்கம் பவுடரில் பயன்படுத்தப்படும் ஆஸ்பெடாஸ் காரணமாக குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்கா மற்றும் கனடாவில் அந்நிறுவனத்துக்கு எதிராக நுகர்வோர், சார்பு அமைப்புகள் சார்பில் 38,000 வழக்குகள் தொடர்ந்தன.
இதனையடுத்து அமெரிக்கா மற்றும் கனடாவில் டால்கம் பவுடர் தேவை வீழ்ச்சியடைந்து விற்பனையை நிறுத்தியது. தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு உலகம் முழுவதும் டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.latest tamil news


ஜான்சன் அண்டு ஜான்சன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: -

”உலகளாவிய சந்தையில் சோள மாவு அடிப்படையிலான பேபி பவுடருக்கு மாறுவதற்கான வணிக முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். எங்கள் வணிக தயாரிப்புகளை நீண்டகால வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தி வருகிறோம். இந்த மாற்றம் எங்கள் தயாரிப்புகள் எளிமையாகவும், விரைந்தும் தொடர்ந்து உலகளாவிய நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்ய உதவும்.

எங்கள் டால்கம் பவுடரின் பாதுகாப்பு குறித்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. டால்க் அடிப்படையிலான ஜான்சன் பேபி பவுடர் பாதுகாப்பானது. அதில் ஆஸ்பெடாஸ் கலக்கப்படுவதில்லை. புற்றுநோயை ஏற்படுத்தாது என்பதை உலகம் முழுவதும் நடந்த பல்வேறு மருத்துவ ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னால் நாங்கள் உறுதியாக நிற்கிறோம்.”


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் தவறான தகவல் பரப்பப்பட்டதன் காரணமாகவே, வட அமெரிக்காவில் தங்களது நிறுவனத்தின் தயாரிப்புக்கு எதிராக 38,000 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஆக-202216:14:59 IST Report Abuse
ஆரூர் ரங் குழந்தைகள் உடலில் பவுடர், லோஷன் போன்றவற்றை போடுவது உடல்நலத்துக்குக் கேடு. நம்நாட்டுத் தட்பவெட்ப நிலைக்கு தேவையற்றவை. 🤔 அந்நிய மோகத்தால் அவற்றைப் பயன்படுத்தி பிள்ளைகளின் உடல்நலத்தைக் கெடுக்காதீர்கள்
Rate this:
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
12-ஆக-202215:20:15 IST Report Abuse
Palanisamy Sekar அரசியல் வியாதிகளின் சூழ்ச்சிக்கு பலியானது. தவறான தகவல்களை பரப்புரை செய்ததால் ஒரு நிறுவனமே பாதிக்கப்பட்டுள்ளது. காரணம் அரசியல் வியாதிகள் கேட்ட பணத்தை கொடுக்க மறுத்ததுதான் காரணமே. பொய் பிரச்சாரம் செய்தவர்களால் எதனையும் நிரூபிக்க இயலவில்லை. நல்லதை தவறாக சித்தரிப்பதும்..கேட்டு என்று ஒதுக்கியதை விளம்பரம் மூலம் விற்பதும் கேடுகெட்ட சிலரால் பலருக்கும் பாதிப்பு. உலகத்தில் பல இடங்களில் பிரஷாந்த் கிஷோர் பலர் உண்டு போல.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
12-ஆக-202214:56:36 IST Report Abuse
Natarajan Ramanathan ஆனால் அநியாய விலைக்கு விற்பதை மறுக்க முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X