பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, சாம்ஸங் துணைத்தலைவருக்கு பொது மன்னிப்பு

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சியோல் : பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, லஞ்ச வழக்கில் தண்டனை பெற்ற சாம்ஸங் துணைத் தலைவர் ஜே.ஒய்.லீக்கு, பொதுமன்னிப்பு வழங்கி தென்கொரிய அதிபர் உத்தரவிட்டுள்ளார்.கடந்த 2017ம் ஆண்டு தென்கொரிய முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹேக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் சாம்ஸங் துணைத் தலைவரான ஜே.ஒய். லீ (54) கைது செய்யப்பட்டார். சியோல் உயர்நீதிமன்றம், அவருக்கு 30 மாதங்கள் சிறை தண்டனை
South Korea, Samsung, Heir, Pardon, தென்கொரியா, சாம்ஸங், ஜே ஒய் லீ, Bribe Case, சியோல், நீதிமன்றம்



சியோல் : பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, லஞ்ச வழக்கில் தண்டனை பெற்ற சாம்ஸங் துணைத் தலைவர் ஜே.ஒய்.லீக்கு, பொதுமன்னிப்பு வழங்கி தென்கொரிய அதிபர் உத்தரவிட்டுள்ளார்.


கடந்த 2017ம் ஆண்டு தென்கொரிய முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹேக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் சாம்ஸங் துணைத் தலைவரான ஜே.ஒய். லீ (54) கைது செய்யப்பட்டார். சியோல் உயர்நீதிமன்றம், அவருக்கு 30 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து 18 மாதங்கள் சிறையில் இருந்த அவர், கடந்தாண்டு பரோலில் விடுதலை செய்யப்பட்டார். 5 ஆண்டுகள் பணிபுரியக் கூடாது, வெளிநாடு செல்லக் கட்டுப்பாடுகளுடன் பரோலில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது லீக்கு பொது மன்னிப்பு வழங்கி தென்கொரிய அதிபர் உத்தரவிட்டுள்ளார்.


latest tamil news


இதன் மூலம் சாம்ஸங் நிறுவனத்தின் நிர்வாக மேலாண்மை பொறுப்பை லீ ஏற்க முடியும். அவரது வருகையால் சிப் மேக்கிங் முதல் முதலீட்டு திட்டங்கள் வரை, சாம்ஸங் நிறுவனம் முக்கியமான முடிவுகள் எடுக்க இயலும். தென்கொரியாவில் செமி கண்டக்டர் தொழில், சப்ளை பற்றாக்குறை, கோவிட் மற்றும் பணவீக்கம் போன்றவற்றால், சவால்களை சந்தித்து வரும் நிலையில், பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.


தென்கொரிய அரசு அதிகாரிகள் கூறுகையில்,

'தொழிலதிபர்களுக்கு சிறப்பு பொது மன்னிப்பு, நாட்டின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது. இந்த உத்தரவால், தொழில்நுட்ப முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் அதிகரிக்கும். இது நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவும்.'

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
13-ஆக-202200:58:12 IST Report Abuse
sankar சாம்சங் கருணையில் வாழ விரும்புகிறது கொரியா இத்தலைப்பை மாத்துங்க
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-ஆக-202218:59:48 IST Report Abuse
Kasimani Baskaran காப்பி கிங்தான் சாம்சங்... ஷேம்ஷேம் சங்...
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
12-ஆக-202218:12:09 IST Report Abuse
மலரின் மகள் ஊழல்வாதிகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு மிக அவசியம் என்கிறது இந்த நிகழ்வு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X