புலிகள் காப்பக பழங்குடியின கிராமத்தில் பறக்கும் தேசிய கொடி

Added : ஆக 12, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
பந்தலூர் : 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், முதுமலை புலிகள் காப்பகம் பென்னை பழங்குடியின கிராமத்து வீடுகளில் சுதந்திர கொடி ஏற்றப்பட்டது. இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், வீடுகள் தோறும் தேசிய ஏற்ற பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக உள்ளாட்சிகள், தபால் நிலையங்கள், தனியார் அமைப்புகள் மக்களுக்கு தேசிய கொடிகளை வழங்கி
தேசிய கொடி, 75 வது சுதந்திர தின விழா, முதுமலை புலிகள் காப்பகம் , பழங்குடியின மக்கள்,  thesiya kodi, 75th Independence Day Celebration, palangudi makkal,

பந்தலூர் : 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், முதுமலை புலிகள் காப்பகம் பென்னை பழங்குடியின கிராமத்து வீடுகளில் சுதந்திர கொடி ஏற்றப்பட்டது. இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், வீடுகள் தோறும் தேசிய ஏற்ற பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக உள்ளாட்சிகள், தபால் நிலையங்கள், தனியார் அமைப்புகள் மக்களுக்கு தேசிய கொடிகளை வழங்கி வருகின்றனர். இதில் ஒரு கட்டமாக நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனத்திற்குள் உள்ள பழங்குடியின மக்களுக்கும் சுதந்திர தின விழா மற்றும் வீடுகள்தோறும் தேசிய கொடியேற்றுவதன் அவசியம் குறித்து, பென்னை அரசு துவக்கப்பள்ளி பழங்குடியின மாணவர்கள் மூலம், பள்ளி தலைமையாசிரியர் முருகேசன் தலைமையில், தேசிய கொடிகளை ஏந்தி, கொடி பாடலை பாடி ஊர்லமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. வனத்திற்கு மத்தியில் சுதந்திர காற்றை சுவாசிக்கும் பழங்குடியின மக்கள், நாட்டின் சுதந்திர தின விழாவையும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nachimuthu - mettur,இந்தியா
13-ஆக-202209:36:08 IST Report Abuse
Nachimuthu இந்த உணர்வு நகரத்தில் வாழும் மனிதர்களுக்கு வருவதில்லையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X