திமுக ஆட்சியில் பெயரளவில் மட்டுமே சமூக நீதி: அண்ணாமலை தாக்கு

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
சென்னை: திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது என்பதை சமீப காலமாக நடக்கும் பல சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சமூக நீதியை நிலைநாட்டி விட்டோம் என மேடைக்கு மேடை பேசுவதும், தமக்குத் தாமே சமூகநீதி காவலர் என்ற பட்டங்களை சூட்டிக் கொள்வதை
Tamilnadu BJP, Annamalai, Social Justice, தமிழகம், பாஜக, அண்ணாமலை, சமூக நீதி, திமுக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது என்பதை சமீப காலமாக நடக்கும் பல சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சமூக நீதியை நிலைநாட்டி விட்டோம் என மேடைக்கு மேடை பேசுவதும், தமக்குத் தாமே சமூகநீதி காவலர் என்ற பட்டங்களை சூட்டிக் கொள்வதை வாடிக்கையாகவும் கொண்டுள்ளனர் திமுக தலைவர்கள். சமீபத்தில் சின்னசேலம் வட்டம், எடுத்தவாய்நத்தம் ஊராட்சி தலைவர் சுதா வரதராஜி ஒரு பட்டியலினத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தை சொல்லி சுதந்திர தினத்தன்று நமது தேசியக் கொடியை ஏற்ற அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.

இது தொடர்பாக பா.ஜ., துணைத் தலைவர் சம்பத், கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். பிறகு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுதா வரதராஜி சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றலாம் என்ற தீர்வு எட்டப்பட்டுள்ளது. தமிழக தீண்டாமை ஒழிப்பு இயக்கம் நடத்திய கணக்கெடுப்பில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. 24 மாவட்டங்களில் 386 ஊராட்சிகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், பட்டியலினத்தை சேர்ந்த 20 ஊராட்சி தலைவர்களுக்கு சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.


latest tamil news


அதுமட்டுமல்லாது, 22 ஊராட்சிகளில் பட்டியலினத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர்களுக்கு அமர இருக்கை மறுக்கப்பட்டு தரையில் அமர்த்தப்படுகிறார்கள். 42 ஊராட்சிகளில், பெயர் பலகை வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இங்கு அமர்ந்து கொண்டு உ.பி., பீஹாரில் என்ன நடக்கிறது என விவாதித்துக் கொண்டிருக்கும் சிலர் தமிழகத்தில் சம உரிமையோடு அனைத்து மக்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்ற மாயையில் இருக்கிறார்கள். திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது என்பதை சமீப காலமாக நடக்கும் பல சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KayD -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-202208:11:47 IST Report Abuse
KayD ,,,,
Rate this:
Cancel
13-ஆக-202206:39:09 IST Report Abuse
அப்புசாமி டாஸ்மாக்கை மூடணுமா? மூடிறலாம். முதலில் மோடி ஐயா கிட்டே பேசி ஒரு 36000 கோடி இழப்பு நிதி வாங்கிக் குடுங்க.
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
13-ஆக-202203:34:44 IST Report Abuse
Venkatakrishnan ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X