பொதுமக்களின் மகா சங்கமம்! சுதந்திர தின பவள விழா மெல்லோட்டத்தில் பங்கேற்க பேரார்வம்

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (26) | |
Advertisement
திருப்பூர்: சுதந்திர தின பவள விழாவையொட்டி, திருப்பூரில் 'தினமலர்' நாளிதழ் சார்பில், வரும் 14ம் தேதி நடைபெற உள்ள மெல்லோட்டத்தில் பங்கேற்க, குடும்பத்தினர் ஒவ்வொருவரும் பேரார்வத்துடன் உள்ளனர். தேசப்பற்றை உணர்த்தும் வகையில், மகா சமுத்திரமாய், மெல்லோட்டத்தில் பொதுமக்கள் குவிய உள்ளனர்.நம் நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தினம், அமுத பெருவிழாவாக நாடு முழுவதும் கொண்டாடும்
தினமலர், சுதந்திரதின_பவளவிழா, மெல்லோட்டம், மகா சங்கமம்,

திருப்பூர்: சுதந்திர தின பவள விழாவையொட்டி, திருப்பூரில் 'தினமலர்' நாளிதழ் சார்பில், வரும் 14ம் தேதி நடைபெற உள்ள மெல்லோட்டத்தில் பங்கேற்க, குடும்பத்தினர் ஒவ்வொருவரும் பேரார்வத்துடன் உள்ளனர். தேசப்பற்றை உணர்த்தும் வகையில், மகா சமுத்திரமாய், மெல்லோட்டத்தில் பொதுமக்கள் குவிய உள்ளனர்.

நம் நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தினம், அமுத பெருவிழாவாக நாடு முழுவதும் கொண்டாடும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சுதந்திர போராட்டத்தில் பல வீரர்களையும், தியாகிகளையும் உருவாக்கி, வரலாறு படைத்த திருப்பூர், சுதந்திர தின பவள விழா கொண்டாட்டத்திலும் சிறப்பிடம் பெறவுள்ளது. உழைப்பிலும், உதவும் எண்ணத்திலும் மட்டுமல்ல... தேசப்பற்றை வெளிப்படுத்துவதிலும் திருப்பூர் மக்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை, உலகத்துக்கு நிரூபிக்கும் வகையில் அதற்கான வாய்ப்பை 'தினமலர்' நாளிதழ் ஏற்படுத்தியுள்ளது.

தேசப் பற்றை தங்கள் நெஞ்சத்தில் ஏற்றி வைத்துள்ள திருப்பூர் மக்கள் தேசியக் கொடியை கையில் ஏந்திய வண்ணம் பங்கு பெறும் வகையில், சுதந்திர தின பவள விழா நிகழ்ச்சியாக வரும் 14ம் தேதி திருப்பூரில் 'தினமலர்' நாளிதழ் சார்பில் மெல்லோட்டம் நடைபெறவுள்ளது. அன்று காலை 7:00 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன் மெல்லோட்டம் துவங்கவுள்ளது. முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில், பவள விழா சுதந்திர தின நினைவாக மரக்கன்றுகள் நடப்படுகிறது.


latest tamil news


தொடர்ந்து பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் பங்கேற்கும் மெல்லோட்டம் துவங்குகிறது. பல்லடம் ரோடு, காமராஜ் ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, முனிசிபல் ஆபீஸ் வீதி, பார்க் ரோடு, நேரு வீதி வழியாக நஞ்சப்பா பள்ளி வளாகத்தில் நிறைவடையவுள்ளது. அங்கு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தியும், உறுதி மொழி ஏற்பும் நடைபெறவுள்ளது. நாட்டையே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அமையவுள்ள இந்த மாபெரும் நிகழ்வில் பங்கேற்க நுாற்றுக்கணக்கான அமைப்புகள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளன. குடும்பத் தலைவர்கள், இல்லத்தரசிகள், அவர்களது மகன் மற்றும் மகள்கள் என குடும்பத்தினருடன் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றனர்.

இதுவரை பதிவு செய்யாத, இதில் பங்கேற்க விரும்பும் அமைப்புகளும், காலை 9:30 மணி முதல் மாலை 6:00 வரை, 98940 09314 மற்றும் 95666 57023 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். மெல்லோட்ட நிகழ்வில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், சேவை அமைப்பினர், தொழிற்துறையினர், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், குடியிருப்போர் சங்கங்கள், வியாபாரிகள் சங்கம், சமுதாய அமைப்புகள், நற்பணி மன்றங்கள் என பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், தங்கள் பங்கேற்பை உறுதி செய்துள்ளன.

அமைப்புகள், சங்கங்கள் என்பது மட்டுமின்றி அனைத்து தரப்பு பொதுமக்களும் இதில் தனி நபர்களாக நேரில் வந்து கலந்து கொள்ளலாம். தேசப் பற்றுக் கொண்ட நபர்கள் தங்கள் குடும்பம், உறவினர், நண்பர்கள் போன்றோருடன் அணி அணியாக வந்தும் தங்கள் பங்களிப்பை வழங்கலாம். மெல்லோட்டத்தில் பங்கேற்போர் தங்கள் அமைப்பு பெயர் பொறித்த பேனர்கள் மற்றும் தேசிய கொடியினை ஏந்திய வண்ணம் வரலாம். தேசிய கொடி தவிர்த்த பிற கொடிகள் தவிர்க்க வேண்டும். அமைப்பு மற்றும் தனி நபர் சார்ந்த கோஷங்கள் எழுப்பக் கூடாது. அமைப்புகள் தங்கள் அமைப்பு பெயர் கொண்ட பேனர்களுடன் சீருடையிலும் பங்கேற்கவுள்ளன.

இலவச பஸ் வசதி ஏற்பாடு

‛தினமலர்' நாளிதழ் நடத்தும், சுதந்திர தின மெல்லோட்டத்தில், பங்கேற்பவர்களுக்கு பஸ் வசதி, குடிநீர் வசதி உட்பட பல வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து துவங்கும் மெல்லோட்டம், நஞ்சப்பா பள்ளியில் நிறைவடைகிறது. பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு பின், மீண்டும் கலெக்டர் அலுவலகம் செல்ல வசதியாக, பள்ளி அருகே 17 பஸ்கள் நிறுத்தப்படுகின்றனர்.
அந்த பஸ்களில் பயணித்து, கலெக்டர் அலுவலகம் வரை இலவச பயணம் செய்யலாம். இதேபோல, நிகழ்ச்சி துவங்கும் இடமான கலெக்டர் அலுவலகம் எதிரிலுள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டப வளாகத்தில், வாகனங்களை நிறுத்த ‛பார்க்கிங்' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
13-ஆக-202220:07:16 IST Report Abuse
sankaseshan RSS hoisted flags in their Nagpur headquarters and all it,s branches in the country.
Rate this:
Cancel
R.M.Muthu - Guangzhou,சீனா
13-ஆக-202219:41:09 IST Report Abuse
R.M.Muthu ,,,,
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
13-ஆக-202216:41:36 IST Report Abuse
Priyan Vadanad தேசப்பற்று எல்லோருக்கும் நிச்சயமாக இருக்கிறது. இந்த தேசப்பற்று உணர்வைகூட அரசியல் ஆதாயமாக்க சூழ்ச்சியுடன், வக்கிர உணர்வுடன் செயல்படும் ஒருசில மனிதர்களால் நமது தேசபற்றுகூட காயப்படுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X