அமைச்சு பணியாளர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 12, 2022 | |
Advertisement
கல்வித் துறை அமைச்சு பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, டி.பி.ஐ., வளாகத்தில், அலுவலர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.தமிழக கல்வித் துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. அரசு ஊழியர் சங்க தலைவர் அன்பரசு மற்றும், 'ஜாக்டோ - ஜியோ' சங்க நிர்வாகிகள் பேசினர்.கல்வி துறையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக, தொகுப்பூதியத்தில்

கல்வித் துறை அமைச்சு பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, டி.பி.ஐ., வளாகத்தில், அலுவலர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.



தமிழக கல்வித் துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. அரசு ஊழியர் சங்க தலைவர் அன்பரசு மற்றும், 'ஜாக்டோ - ஜியோ' சங்க நிர்வாகிகள் பேசினர்.கல்வி துறையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக, தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்களுக்கும், அரசு மாதிரி பள்ளி அமைச்சு பணியாளர்களுக்கும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.



அமைச்சு பணியாளர்களுக்கு பொது மாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும். பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். கல்வித் துறை அமைச்சு பணியாளர்களுக்கு, மாதம் தோறும் குறைதீர்ப்பு கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், ஆர்ப்பாட்டத்தில்வலியுறுத்தப்பட்டன.இந்த கோரிக்கையை வலியுறுத்தி, வரும், 23ம் தேதி, சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X