வாடகை வீட்டிற்கும் 18% ஜிஎஸ்டி: மத்திய அரசு

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (32) | |
Advertisement
புதுடில்லி: ஜிஎஸ்டி.,யின் கீழ் பதிவு செய்த வாடகை வீடுகளுக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்தியாவில் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் பரிந்துரைகளின்படி, வாடகைக்கு குடியிருக்கும் வீட்டுக்கும் வரி கட்டவேண்டும் என மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜிஎஸ்டி.,யின் கீழ் பதிவு செய்த வாடகைதாரர் மாத வாடகை
Rental House, GST

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஜிஎஸ்டி.,யின் கீழ் பதிவு செய்த வாடகை வீடுகளுக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் பரிந்துரைகளின்படி, வாடகைக்கு குடியிருக்கும் வீட்டுக்கும் வரி கட்டவேண்டும் என மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜிஎஸ்டி.,யின் கீழ் பதிவு செய்த வாடகைதாரர் மாத வாடகை வழங்கும்போது ஜிஎஸ்டி வரியாக 18 சதவீதம் செலுத்த வேண்டும். இந்த புதிய விதிமுறை கடந்த ஜூலை 18ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், இந்த விதிமுறை ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்துள்ள வாடகைதாரருக்கு மட்டுமே பொருந்தும்.


latest tamil news


தனி நபர் சொந்த பயன்பாட்டுக்காக வாடகைக்கு வீடு எடுத்திருந்தால் ஜிஎஸ்டி வரி பொருந்தாது. வணிக நோக்கத்துக்காக வீடு வாடகை எடுத்திருந்தால் வரி செலுத்த வேண்டும். முன்னதாக, கமர்சியல் பயன்பாட்டிற்கான அலுவலகம் மற்றும் தொழில், பொது பயன்பாட்டிற்காக லீசுக்கு விடுதல் போன்றவற்றுக்கு வாடகைக்கு விடப்படும் சொத்துக்களுக்கே இதுவரை ஜிஎஸ்டி தொகை வசூல் செய்யப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthil Kumar - chennai,இந்தியா
18-ஆக-202209:38:31 IST Report Abuse
Senthil Kumar இந்த நாடு மெல்ல மெல்ல மெலிந்து போய்க்கொண்டு இருக்கு கூடிய விரைவில் அடிமை நிலைக்கு போக்கொண்டு இருக்கோம் அது புரியாமல் நமக்குள் அவர்களுக்கு பல்லக்கு தூக்கி கொண்டு இருக்கும் வரும் சந்ததியினர் மிகவும் ஆபத்தான விட்டு செல்ல வேண்டிய நிலைமை இருக்கிறோம் , இந்த கொடிய இரக்கம் அற்றவர் கலியன் கையில் சிக்கி உள்ளது என்ன பண்ண முடியும் இந்த நாட்டை ,பாரத மாதா உன்வாழ்க்கை உன் கையில் .
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
12-ஆக-202221:14:19 IST Report Abuse
Visu Iyer கொஞ்சம் யோசிச்சு பாருங்க //சொந்த வீடு கடனுக்கு வாங்கினால் ரேப்கோ வட்டி உயர்வு என கடன் வட்டியை உயர்த்திடறாங்க... வாடகை வீட்டுக்கு போனால், ஜிஎஸ்டி வரி போடுறாங்க... அப்போ எங்கே தானுங்க இருக்கிறது... எப்படி தானுங்க வாழறது.... என்று உங்களுக்கு யோசனையாக இருக்கிறதா...?
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
12-ஆக-202221:12:35 IST Report Abuse
Visu Iyer work from ஹோம் என்றால் ஜிஎஸ்டி வரி கட்டணும்னு சொல்லுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X