மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே தேசியக் கொடி ஏற்ற வேண்டும்: தலைமை செயலர்

Updated : ஆக 12, 2022 | Added : ஆக 12, 2022 | கருத்துகள் (25) | |
Advertisement
சென்னை: அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே எவ்வித சாதிய பாகுபாடின்றி தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சுதந்திர தின விழாவில் சென்னை தலைமை செயலகம் முதல் கிராம ஊராட்சிகள் வரை அனைத்து தலைமை அலுவலக
தேசியக் கொடி, இறையன்பு , 75வது சுதந்திர தின விழா, Thesiya kodi, iraiyanbu, 75th Independence Day Celebration,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே எவ்வித சாதிய பாகுபாடின்றி தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சுதந்திர தின விழாவில் சென்னை தலைமை செயலகம் முதல் கிராம ஊராட்சிகள் வரை அனைத்து தலைமை அலுவலக வளாகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைப்பது மரபாகும். ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதிய பாகுபாடுகள் காரணமாக தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்னைகளோ, தேசியக் கொடியையும், அதனை ஏற்றுபவரையும் அவமதிக்கும் செயலோ நடைபெறலாம் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது. தீண்டாமை காரணமாக எழும் எந்த ஊனத்தையும் அமல்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.


latest tamil news


இதனை கருத்தில் கொண்டு, எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு, அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
12-ஆக-202220:25:37 IST Report Abuse
Ramesh Sargam ஏன்? மக்களில் எவ்வளவோ பேர் பொது காரியங்களில், அதாவது தன்னார்வர்களாக சிறப்பாக செயல்படுகின்றனர். அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்களை கொடியேற்ற வைக்கவேண்டும்.
Rate this:
Cancel
12-ஆக-202220:23:01 IST Report Abuse
மதுமிதா தேர்ந்தெடுத்த மக்கள் இல்லங்களில் இனிப்புடன் கொடிஏற்றி மகிழலாம் அல்லவா
Rate this:
Cancel
RRR - Nellai,இந்தியா
12-ஆக-202220:17:56 IST Report Abuse
RRR அது மட்டும் பத்தாது... யோக்கியமான, தேசபக்தி உள்ள ஆளா இருக்கணும்... அது முக்கியமுங்க ஆபிசர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X